chennireporters.com

ஆமை வேகத்தில் ஆவடி தாசில்தார் கல்லா கட்டும் சர்வேயர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் தாசில்தார்கள் பெரும்பாலும் ஊழல் கறை படிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருவாய் துறை செயலாளருக்கும் முதலமைச்சருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது .

ஆவடியில் உள்ள தாலுக்கா ஆபீசில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதாகவும் தாசில்தார் சிவகுமார் மிகவும் மந்தமாக செயல்படுவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

ஆனால் இதுவரை கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரும் அமைதியாக மௌனம் காத்து வருகிறார்.

ஆவடி தாலுக்கா ஆபிசில் பட்டா வழங்க மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை காலம் தாழ்த்துவதாகவும், உரிய ஆவணங்கள் வழங்கியும் மனுக்களை தள்ளுபடி செய்யும் வட்டாட்சியார் ஆவணங்களை சரிபார்பதாக ஒரு மாதம் காலம் எடுத்து கொண்டு பின்னர் மனுவை தள்ளுபடி செய்கிறார் தாசில்தார் சிவகுமார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி தாலுக்கா 30 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது.

இங்கு நாளொன்றுக்கு பட்டா மாறுதல், பெயர் மாற்றம், உட்ப்பிரிவு பட்டா என 500 மேற்பட்ட மனுக்கள் இ-சேவை மையம் மூலம் பெறப்படுகிறது.

இங்கு பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் வட்டாட்சியர் மற்றும் சர்வேயர்கள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கு பட்டா வழங்க ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை காலம் தாழ்த்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

நில பட்டா வழங்குவதில் வட்டாட்சியர் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதால் தினந்தோறும் வட்டாட்சியர் அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர்.

இதனால் எப்போதும் ஆவடி தாலுக்கா ஆபிஸ் பரபரப்பாக காணப்படுகிறது.

பட்டா குறித்து சர்வேயர்களிடம் கேட்டால் நாங்கள் உங்கள் மனுவை பரிசிலனை செய்து வட்டாட்சியர் சிவகுமார் அவர்களிடம் அனுப்பிவிட்டதாகவும் வட்டாட்சியர் ஆவணங்களை சரிபார்க்க இரண்டு வாரம் முதல் ஒருமாதம் வரை காலம் எடுத்துக்கொண்டு உங்கள் மனுவை நிராகரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கான இலவச பட்டாக்கள் வழங்குவது வழக்கம் ஆனால் இதுவரைக்கும் ஆவடியில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஒன்று கூட நடைபெறாமல் கிடப்பில் உள்ளதால் பட்டா பெறுவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஆவடி தாலுக்கா அலுவலகத்தில் வழங்கப்படும் பட்டாக்கள் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகிறது.

இ-சேவை மையத்தில் பதிவு செய்பவர்களின் முதன்மை அடிப்படையிலேயே பட்டா வழங்கப்படுகிறது.

ஆவடி தாலுகாவை பொருத்தவரையில் பட்டாக்கள் காலதாமதம் ஆவதற்கு இந்த முதன்மை முறையே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

காரணம் இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பெறப்பட்ட மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் புதிய மனுக்களுக்கு பட்டா வழங்க ஆன்லைனில் லாகின் செய்தால் கிடப்பில் இருக்கும் மனுக்களை முதன்மையானதாக காண்பிக்கும்.

முறையாக அந்த மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும்.

தற்போது இருக்கும் வட்டாட்சியர் சிவகுமார் மனுக்களை நிராகரித்து அனுமதிப்பதில்லை எனவே 2019 இல் பெறப்பட்ட மனுக்களை தேடி எடுப்பதில் இருக்கும் சிக்கல் தான் பட்டாக்கள் வழங்குவதற்கு கால தாமதத்திற்கான முதன்மை காரணமாக கூறப்படுகிறது.

பட்டாக்கள் வழங்க காலதாமதம் அதன் காரணமாக பொதுமக்கள் கட்டட அனுமதி வங்கி கடன் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே ஆன்லைனில் பதிவு செய்யும் மனுக்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்தால் தானாகவே ஆன்லைனில் இருந்து நிராகரிக்கப்பட வேண்டிய திருத்தங்கள் ஆன்லைனில் கொண்டுவரப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் ஆமை வேகத்தில் செயல்படும் தாசில்தார் சிவக்குமார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் (காசில்) சாரி தாசில்தாருக்கும் கலெக்டருக்குமே வெளிச்சம்.

தலைமை சர்வேயர் ஆக அறிவழகன் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் கீழ் பணியாற்றும் சர்வேயர்கள் பட்டா கேட்டு வரும் பொதுமக்களிடம் பெரும் தொகையை வசூலித்து வருகின்றனர்.

இதனால் தாசில்தாரை விட தினந்தோறும் சர்வேயர்கள் அதிக அளவில் கல்லா கட்டி வருகிறார்கள். இதில் முதலிடத்தில் இருப்பவர் திருமுல்லைவாயில் சர்வேயர் பாலமுருகன் தான் என்று சொல்கிறார்கள் பல புரோக்கர்கள்.

இதையும் படிங்க.!