chennireporters.com

“லஞ்சம் பஸ்ட்” சம்பளம் நெக்ஸ்ட்! கல்லா கட்டும் தாசில்தார்.

*ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் கந்தசாமி இவர் பணியாற்றும் இடங்களில் அரசு  வழங்கும் சம்பளத்தை சட்டை செய்யாமல் லஞ்சத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வருபவராம் .

இவர் பொன்னேரியில் துணை தாசில்தாராக பணியாற்றிய போது நில பட்டா வழங்க  சுதாகர் என்பவரிடத்தில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.

ஆனால் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இந்நிலையில் அங்கு இருந்து திடீரென  ஊத்துக்கோட்டைக்கு  தாலுக்கா ஆபிசுக்கு மாற்றலாகி வந்து விட்டார்.  சம்பந்தப்பட்ட  சுதாகர்  பலமுறை இவரிடம் செல்போனில் பேசி நான் கொடுத்த லஞ்சப் பணத்தையாவது திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் வாங்குவதையே தொழிலாகக் கொண்ட கந்தசாமி வேலை நடக்காவிட்டாலும் வாங்கிய லஞ்சப்பணத்தை  திருப்பித் தரும் எண்ணம் இல்லாதவர்  கந்தசாமிக்கு வாங்கிய பணத்தை திருப்பித்தரும் பழக்கமே இருந்ததில்லை.  அதனால் சுதாகரிடம் வாங்கிய பணத்தை தர மாட்டேன் என்று உறுதியாக  சொல்லிவிட்டாராம்.

இந்த நிலையில் கோபமடைந்த சுதாகர் ஏற்கனவே லஞ்சம் கொடுக்கும் போது எடுத்து வைத்திருந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

 

வீடியோ வெளியாகி விட்ட நிலையில் அதைப் பற்றி கவலைப்படாமல் இன்னும் இரண்டு கைகளிலும் வேகமாய் லஞ்சப் பணத்தை எண்ணிக்கொண்டே இருக்கிறாராம் துணை தாசில்தார் கந்தசாமி.

கந்தசாமி எந்த வேலை செந்தாலும் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபயாவது லஞ்சமாக வாங்காமல் விடமாட்டாராம். மனிதாபிமானம் இல்லாமல் கலெக்டர் ஆன டாக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் நிர்வாகத்தை பற்றி கவலைப்படாமல் தன் பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாராம்.

இதையும் படிங்க.!