chennireporters.com

#cheating wife; கோடிகளில் புரளும் மாட்டுவண்டி ஓட்டுனர். மோசடி செய்து கல்லா கட்டும் மனைவி.

திருவள்ளூர் அருகே ஈக்காடு பஞ்சாயத்தில் நிதி மோசடி செய்யாத வேலைகளுக்கு பில் போட்டு பணம் கொள்ளை அடித்தது என பல்வேறு முறைகேடுகள் செய்த பெண் பஞ்சாயத்து தலைவர் மீது கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி இடம் பாதிக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர் இந்த செய்தி திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் உள்ள தமிழ்ச்செல்வி என்கிற வார்டு உறுப்பினர் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது.

ஐயா மேற்கண்ட விலாசத்தில் நான் வசித்து வருகிறேன். ஈக்காடு ஊராட்சி மன்றத்தில் ஐந்தாவது வார்டு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறேன். மேற்படி ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவி  லாசனா சத்தியா துணைத் தலைவர் குணசேகர் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் ஆகியோர் கூட்டாக ஒருங்கிணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டு ஊராட்சி மன்றத்தின் நிதியை முறைகேடாக கையாடல் செய்தும் மற்றும் செய்யாத பணிகளை செய்ததாகவும் திருட்டு கணக்கு எழுதுவதும் மற்றும் ஊராட்சி மன்ற ஆவணங்களில் பல்வேறு திருத்தம் செய்து மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவி  லாசனா சத்தியா

இது தொடர்பாக பார்வையில் உள்ள மனுவின் வாயிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர் லாசனாக்கு துணை போகின்றனர். எனவே ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள தனி அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நகல் வழங்கப்பட்டுள்ளது. என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சாயத்து தலைவர் லாசனாவுக்கு பதில் அவரது கணவர் சத்யா தான் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவரை போல உட்கார்ந்தொண்டு அதிகாரம் செய்வார். எல்லா கோப்புகளிலும் அவர் மனைவி போடும் கையெழுத்தை போல அவரே கையெழுத்து போடுவார்.சத்தியா லாசனாவின் கணவர்.

ஈக்காடு பஞ்சாயத்து திருவள்ளூர் நகரத்தை ஒட்டி இருப்பதால் பல்வேறு வெளிமாவட்டத்தில் இருந்து தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இடங்களை வாங்கி இங்கே ப்ளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில்  20க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ப்ளாட் போட்டு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் பஞ்சாயத்து தலைவர் லாசனா கையெழுத்து போடுவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கி வருகிறார். அது தவிர அந்த லேஅவுட்டில் அரை கிரவுண்ட் அல்லது முக்கால் கிரவுண்ட் இடம் அவருக்கு இலவசமாக வழங்கி விட வேண்டும். இது தான் அவர் லஞ்சம் வாங்கும்  ஸ்டைல்.

அப்படி பல நிறுவனங்கள் அவருக்கு  லஞ்சமும் கொடுத்து இடம் வழங்கியிருக்கிறது. அதேபோல ஈக்காடு பஞ்சாயத்தில் 250 வீடுகளுக்கு மேல் பில்டிங் மற்றும் தனியார் நிறுவனங்கள் வீடு கட்டி உள்ளது. ஒரு வீட்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளார். மேலும் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருப்பவர்களுக்கு தண்ணீர் வரி ஐந்தாயிரம் ரூபாய் வீட்டு வரி பத்தாயிரம் ரூபாய் என பொதுமக்களை மிரட்டி பணம் வாங்கியுள்ளார்.இல்லையென்றால் பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டு உங்கள் வீடுகளை இடித்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஈக்காடு பஞ்சாயத்தில் 2,300 பேர் பணியாற்றி வருவதாக ஒரு பொய்யான திருட்டு கணக்கை எழுதி வருகிறார்கள். ஒரு நாள் ஒன்றுக்கு 55 பேர் பணியாற்றினால் அதாவது 55 பேர் வேலை செய்தால் இவர்கள் தரப்பில் பத்து பேர் போலியாக வேலை செய்வதை போல போலி கணக்கெழுதி கொள்ளையடிப்பார்கள். அந்த வகையில் மட்டும் மாதம் ஒன்றுக்கு 92,400 கொள்ளையடித்து வருகின்றனர். அப்படி என்றால் கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 45 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தரம் இல்லாத சாலைகள் போட்டு சில இடங்களில் சாலைகள் போடாமலேயே திருட்டு கணக்கு எழுதி பில் வாங்கி உள்ளனர். என்ஆர்ஜி எஸ் திட்டத்தில் பல லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  15 ஆம் நிதி மண்டலக்குழு நிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளனர். பதவிக்கு வரும்போது கையில் ஒரு பைசா இல்லாமல்  இருந்தவர் தான் இந்த லாசனா. லாசனாவின் கணவர் சத்யா மாட்டு வண்டி ஓட்டி  பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வந்தவுடன் அவர்களுக்கு ஏறக்குறைய சில கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள். அந்த பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் தற்போது லாசனாவின் சொத்து மதிப்பு பட்டியலை சொல்கிறார்கள்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் நியமனம் | Prabhu Shankar appointed as Thiruvallur District Collectorஒரு ஷிப்ட் கார், டிராக்டர், ஒரு குட்டி யானை, ஒரு புல்லட் வைத்துள்ளனர். அது தவிர திருவாலங்காடு அருகே 7 ஏக்கரில் பம்பு செட்டுடன் விவசாய நிலம் வாங்கியுள்ளனர். பூங்கா நகரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு வாங்கி உள்ளனர் பூண்டி அருகே உள்ள மோவூர் என்ற கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாயம் நிலம் வாங்கியுள்ளனர் மேலும் பல இடங்களில் வீட்டுமனைகள் வாங்கி வைத்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களை அழைத்து மாதாந்திர கூட்டம் போடாமலேயே திருட்டுத்தனமாக போலி கணக்கெழுதி வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டதை போல பல ஆவணங்களை தயார் செய்து விட்டனர். இருப்பினும் ஈக்காடு பஞ்சாயத்தில் உள்ள 12 வார்டு உறுப்பினர்களின் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் லாசனாவின் கணவர் சத்தியா ஏழாவது வார்டு உறுப்பினர் சுகுமார் ஆறாவது வார்டு உறுப்பினர் கனகவல்லி நாலாவது வார்டு உறுப்பினர் மாரியம்மாள் ஒண்ணாவது வார்டு உறுப்பினர் குணசேகர் இவர் துணைத்தலைவராக உள்ளார். 12 வது வார்டு உறுப்பினர் ஜான்சன் எட்டாவது வார்டு உறுப்பினர் ராணி ஆகிய ஆறு பேருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்ததாகவும் தனக்கு சாதகமாக கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கேட்டால் நீங்கள் ஆமாம் என்று தலையாட்டுங்கள் என்று தலையாட்டி பொம்மையாக மாற்றி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.Five IAS officers including Gagandeep Singh Bedi got promotion: ககன் தீப் சிங் உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளராக புரமோஷன்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி

மீதமுள்ள ஆறு பேரில் ஒரு உறுப்பினர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். மீதமுள்ள ஐந்து உறுப்பினர்களில் ராஜன், பலராமன், தமிழ்ச்செல்வி, சரவணன், தேவி ஆகிய ஐந்து பேரும் கூட்டாக  இனைந்து அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து லாசனா சத்தியா செய்து வரும் தில்லுமுல்லு பிராடு மோசடி குறித்து பல புகார்கள் அளித்துள்ளனர். உடனடியாக ஆடிட்டிங் வைத்து  எத்தனை லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கின்றனர்.லாசனாவிற்கு எதிராக போர் கொடி தூக்கும் வார்டு உறுப்பினர்கள்.

அது தவிர தேவி என்கிற உறுப்பினர் நம்மிடம் லாசனா கிருத்துவ மதத்தை சார்ந்தவர். சிஎஸ்ஐ சர்ச்சுக்கு சென்று வருகிறார். ஆனால் அவர் தலித் பெண்கள் பிரிவில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்டார் ஆரம்பத்திலேயே அவரை அதிகாரிகள் அவரது வேட்புமனுவை நிராகரிக்காமல் பணம் வாங்கிக்கொண்டு இந்து மதத்தை சார்ந்தவர் என்று தேர்தலில் நிற்க அனுமதி அளித்தனர். ஆனால் அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்தால் அவர் யார் என்பது ஊருக்கே தெரியும் பிசி கிறித்துவ மதத்தை சார்ந்தவருக்கு இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர் என்று  போலியான ஆவணங்களை வைத்து லாசனா தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். இந்த ஒரே ஒரு காரணத்தை வைத்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்.

மேலும் தமிழ்ச்செல்வி என்பவர்  மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர் தான் இந்த சத்யா. இன்று கோடிகளில் புரளுகிறார் அவர் மனைவி கிருத்தவ மதத்தை சேர்ந்தவர். வறுமையிலும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் இன்று மோசடி செய்து மக்கள் பணத்தையும் அரசு பணத்தையும் கொள்ளையடித்து சுகபோகமாய் வாழ்ந்து வருகின்றனர் என்கிறார். அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி அவரது பதவியை பிடுங்கவேண்டும் என்றார். அதிகாரிகள் கட்டாயம் உரிய விசாரணை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்த மோசடி புகார் குறித்து பஞ்சாயத்து தலைவர் லாசனா அவரது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!