chennireporters.com

எம்எல்ஏவாக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

ஈரோடு கிடக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற இவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை 11 மணிக்கு எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு இவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்று கொண்டதற்கு பிறகு  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  இளங்கோவனுக்கு சால்வை அணிவித்தார்.  அதற்கு இளங்கோவன் அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் நேரு, பிச்சாண்டி, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் இ வி கே இளங்கோவனுக்கு சால்வை அணிவித்தனர்.

பின்னர் அப்பாவு இளங்கோவனுக்கு சால்வை அணிவித்தார் .முதலமைச்சருக்கு அப்பாவு புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.  தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. திருப்பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திருவள்ளூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் மற்றும்  திமுக கூட்டணியில் உள்ள அங்கும் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன.

சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ,  சிபிஎம் பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜாவாகிருல்லா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஈரோடு சட்டமன்ற கிழக்கு தொகுதியில் இ வி கே எஸ் இளங்கோவன் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடினார்.  இவர் ஏற்கனவே 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் நின்று எம்எல்ஏவானார்.

38 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் இளங்கோவன்.  இளங்கோவன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெற இருக்கும் முதல் கூட்ட தொடரில் பாஜக மற்றும் எடப்பாடியின் அதிமுக பற்றி அணல் பறக்கும் பேச்சு இடம்பெறும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்.

இதையும் படியுங்கள்.

ஓங்கும் கை” மகுடம் சூடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். – https://www.chennaireporters.com/news/india/ongum-kai-is-crowned-by-evks-elangovan/

இதையும் படிங்க.!