#where the DMK has not engaged in corruption? ; திமுக ஊழல் செய்யாத துறை எது என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா தவெக கேள்வி?

November 16, 2026

By இரா. தேவேந்திரன்.

கோயில்களே குடும்பம் என்று பக்தி பரவசத்துடன் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா எப்போது பெரிய எழுத்தாளர் ஆனார் என்று தெரியவில்லை. காசு இருந்தால் கழுதை கூட நடிகன் ஆகலாம் என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியது தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

திமுக ஆட்சி காலத்தில்  துர்கா ஸ்டாலின் எல்லை மீறிய அதிகார துஷ்பிரியோகம் செய்த சம்பவங்கள் தற்போது வெளியாகி உள்ளது. துர்கா ஸ்டாலின் நானும் அவரும் என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். (அவர் பெயரில் யாரோ ஒருவர் எழுதி கொடுத்த புத்தகம்) என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தை நமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது அன்றைய அரசு அந்த புத்தகத்தை கொள்முதல் செய்து அரசு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். துர்கா ஸ்டாலின் எழுதிய புத்தகம்  கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணம்… என்ற தலைப்பில் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் உலக தரத்திற்கு தமிழகத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது என திமுக தரப்பு தம்பட்டம் அடித்தாலும் கூட, அந்த நூலகம் மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க இல்லை, திமுகவினர் குடும்பம், குடும்பமாக கொள்ளையடிக்க தான் என்பது சமீபத்தில், கோவை பெரிய அறிவுலகத்தில் புத்தக கொள்முதலில் நடந்த முறைகேடு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது, மேலும் அந்த நூலகத்தில் இடம் பெற்ற புத்தகங்கள் கூட மிக பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக ஒரு மாணவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாதிரி விஞ்ஞானியாக வேண்டும், ஒரு மருத்துவராக வேண்டும், அல்லது மிக பெரிய பொறியாளராக வேண்டும் அதற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டிய மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்துக்கு சொந்தமான நூலகத்தில், ஒரு குடுமபத்தின் பெருமையை பேசும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது அடுத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் அவமானத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் இரண்டாவது மகன் எழுதி முக ஸ்டாலின் ஏன் பிரதமராக கூடாது என்கிற புத்தகம் திமுக ஆட்சியில்கட்டப்பட்ட கலைஞர் நூலகம், அண்ணா உலகம், பெரியார் அறிவுலகம் ஆகிய நூலகத்தில் இடம் பெற்று இருக்கிறது, மேலும் ஆதனூர் சோழன் எழுதிய நம்பிக்கை நச்சத்திரம் உதயநிதி ஸ்டாலின், அடுத்து ரெய்ஸ் ஆப் உதயநிதி, மேலும் முக ஸ்டாலின் மனைவி எழுதிய அவரும் நானும், ஆகிய புத்தகங்களும் அரசாங்க நூலகங்களில் இடம் பெற்று இருக்கிறது.

இதில் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் என்கிற புத்தகம், திமுக ஆட்சியில் மிக பெரிய பொருட் செலவில் கட்டப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி கலைஞர் நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், சென்னை அண்ணா நூலகத்தில் மட்டும் இடம் பெற்று இருக்கிறது என்றால், தமிழகத்தில் உள்ள சுமார் 4661 நூலகத்திலும் துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் என்கிற புத்தகம் இடம் பெற்று இருக்கிறது என கூறப்படுகிறது.

அதாவது கடந்த திமுக ஆட்சியில் , தமிழகத்தில் உள்ள அணைத்து நூலகத்திலும் கண்டிப்பாக துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் என்கிற புத்தகம் இடம்பெற செய்வதில் அப்போதைய திமுக ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்து இருக்கிறார்கள், அப்படியானால் தமிழகத்தில் உள்ள நூலகம் மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கவா.? அல்லது துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் என்ற புத்தகத்தை மக்கள் மத்தியில் திணிக்கவா என்கிற கேள்வி தற்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் மக்களுக்கும், மாணவர்களுக்கும் எந்த விதத்திலும் பயனற்ற ஒரு புத்தகமான துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து நுலகத்திலும் இடம் பெரும் வகையில், அப்போதைய முதல்வராக இருந்த முக ஸ்டாலின் அவருடைய முதல்வர் பதிவை எல்லை மீறிய அதிகார துஷ்பிரியோகம் செய்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4661 நூலகத்தில் துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகத்தை எழுதி கொடுத்தது யார்?  நூலகங்களில் இடம் பெறுவதற்கு, அரசு பணம் எவ்வளவு செலவு செய்யப்பட்டது, மேலும் இந்த புத்தகம் யாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது, அந்த புத்தகம் வாங்கப்பட்ட பணம் யாரிடம் சென்றது என்பதை தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்கள் மத்தியில் கடந்த திமுக ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் நடந்த 6 மாதத்தில் பெரியார் அறிவுலகத்தில் நடந்து புத்தக கொள்முதல் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது, அதனை தொடர்ந்து துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகம் தமிழக முழுவதும் உள்ள அரசு நூலகத்தில் தினிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து என்னெல்லாம் வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது. 

இத்தனை புத்தகங்களை அரசு நூலகங்கள் மற்றும் பெரியார் நூலகங்களில் பொதுமக்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட  திமுக அரசு கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை ஏன் நூலகங்களில் வைக்க அனுமதிக்கவில்லை. ?திமுகவின் வரலாற்றையும் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு ஏன் நூலகங்களில் அந்தப் புத்தகத்தை அனுமதிக்கவில்லை? அப்படி அனுமதித்திருந்தால் திமுகவின் கருணாநிதியின் வண்டவாளம் தண்டவாளம் எறி இருக்கும்  என்று தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் முக்கிய அமைச்சர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை தமிழக அரசு அதாவது அன்றைய திமுக அரசு அலுவலகங்கள் மற்றும் பெரியார் நூலகங்களில் வைத்திருந்தால் எதிர்காலத்தில் திமுக என்கிற கட்சியே தமிழ்நாட்டிலிருந்து இருக்காது என்பதை நினைத்த திமுக தலைவர்கள் அதை அனுமதிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் கருணாநிதி தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த பொழுது வனவாசம் புத்தகத்தை மீண்டும் வெளியிடவோ புதிதாக அச்சடிக்கவோ கூடாது என்று தடைவிதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு திமுகவில் இருக்கும் இளைஞர்கள், திமுகவை விரும்புகிற இளைஞர்கள் , ஆதரிக்கிற இளைஞர்கள், கவியரசு கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை ஒரே முறை படித்துவிட்டால் திமுகவினரை தமிழ்நாட்டில் அடித்து விரட்டுவார்கள் என்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர். திமுக ஆட்சியில் இருந்த  2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஆட்சியில்  இருந்த திமுக அரசின் வரவு செலவு கணக்குகள் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. எத்தனை டென்டர்கள் விடப்பட்டது, எந்தெந்த துறை அமைச்சர்களின் துறையில் எவ்வளவு டென்டர்கள் விடப்பட்டது, என்கிற அனைத்து தகவல்களையும் தமிழக வெற்றிக்கழக அரசு ஆராய்ந்து வருவதாக அந்த கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டது. கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் சிபிஐ மற்றும் வருமானவரித்துறை பொருளாதார குற்றப்பிரிவு என அனைத்து பிரிவினரும் விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக ஊடகப் பிரிவை சார்ந்த நிர்வாகிகள். அப்போதுதான் திமுக எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல்  நடத்தியுள்ளது எந்தெந்த அமைச்சர்கள் எவ்வளவு கோடி ரூபாய் ஊழல் செய்தார்கள் மருமகன் எத்தனை விஷயங்களில் தலையிட்டார் மகள் எந்தெந்த விஷயங்களில் தலையிட்டார் அவருடைய குடும்ப நிர்வாகிகள் எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்கிற எல்லா செய்திகளும் வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள். முதலமைச்சர் விஜய் விரைஇல் தனது கையில் சாட்டையை எடுப்பார் என்கிறார்கள் சில உளவுத்துறை அதிகாரிகள்.

Share:

இரா. தேவேந்திரன்.

November 16, 2026