காவல் இன்ஸ்பெக்டரை மிரட்டும் சவுக்கு, ஷபீர் கும்பல் புரோக்கர் சாந்தியின் ஆதரவு பத்திரிகை கும்பல்கள் அட்டூழியம் கோயம்பேடு க்ரைம் இன்ஸ்பெக்டரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் என்ற தலைப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டது. இந்த செய்தியை தினகரன் சீப் ரிப்போட்டர் சுரேஷ்வேதநாயகம் தனது ஆகிசில் பணியாற்றும் தாம்பரம் பகுதி ரிப்போட்டர் சரத் என்கிற சரத்குமார் மூலம் ஷேர் செய்ய சொன்னார் என்று போலீஸ் விசாரணையில் தெரிவந்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு கண்டனங்களும் கல எதிப்புகளும் எழத்தொடங்கின . இந்த நிலையில் பாலிமர் டிவியில் பணியாற்றும் ரிப்பொட்டர் கதிரவன் என்பவர் ரிப்போட்டர்ஸ் குருப்பில் தனது ஆதங்கத்தையும் பல கேள்விகளையும் கேட்டு ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவுக்கு இதுவரை சென்னை பிரஸ்கிளப் நிர்வாகிகள் யாரும் பதில் சொல்லலவில்லை என்பது குறிப்பிடதக்கது.
சென்னை கோயம்பேடு காவல் எல்லையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியர் ஒருவர், எங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை கையாடல் செய்துவிட்டார். இதுகுறித்து முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ஒருவர், கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், புகார் அளித்த முத்தூட் பைனான்ஸ் மேலாளரிடம் நாங்கள் விசாரணை நடத்தி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். அதற்காக எங்கள் காவல் நிலையத்திற்கு பிரிண்டர் ஒன்று வாங்கி கொடுங்கள் என்று காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்டர் பேடில் தனது கையெழுத்துடன் ஸ்பான்சர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் பாலிமர் தொலைக்காட்சி க்ரைம் நிருபர் கதிரவன் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனே அவர், க்ரைம் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனனை நேரில் சந்தித்து, புகார் கொடுக்க வந்தவர்களிடம் பிரிண்டர் கேட்கலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் நான் காவல் நிலையத்திற்குக்காக என்னுடைய லட்டர் பேட் மூலம் தான் ஸ்பான்சர் கேட்டேன். நான் யாரிடமும் எனக்கான லஞ்சம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். பிறகு நிருபர் கதிரவன் இன்ஸ்பெக்டரிடம் நான் தனியாக பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்தி வருகிறேன். அந்த சங்கத்திற்கு தலைவராக உள்ளேன்.
அதனால் தீபாவளி ஸ்பான்சராக ரூ.5 லட்சம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் ‘சார் நான் என்ன கந்து வட்டிக்கா பணம் கொடுக்கிறேன் என்னிடம் ரூ.5 லட்சம் கேக்றீங்க….. சார் பணம் எல்லாம் கொடுக்க முடியாது. 5 லட்சம் ரூபாய் இருந்தால் நான் ஏன் பிரிண்டர் தனியார் கம்பெனியிடம் வாங்கப்போகிறேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு நிருபர் கதிரவன் சார் கோயம்ேபடு மிகவும் வசதியான ஏரியா, வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதி, யாரிடமாவது ஸ்பான்சர் பிடித்து கொடுங்க சார். இல்லை என்றால் நீங்கள் புகார் அளிக்க வந்தவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக செய்தி போடுவேன். நான் சொன்னால், நியூஸ் தமிழ் 24\7 சேனல் க்ரைம் நிருபர் சுதர்சனன், தந்தி டிவி க்ரைம் நிருபர் சாலமன், புதிய தலைமுறை க்ரைம் நிருபர் அன்புசெல்வன் மூலம் அனைத்து டிவிக்களிலும் செய்தி போடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதோடு இல்லாமல் நேரடியாக கமிஷனரிடம் பேசும் டைம்ஸ் ஆப் இந்தியா க்ரைம் செல்வராஜ், தவெக பத்திரிக்கையாளர்கள் பிரிவு பொறுப்பாளர் சபீர் அகமது மூலம் உன்னை சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு மாற்றிவிடுவோம் என்று மிட்டியுள்ளார்.
பாலிமர் தொலைக்காட்சி க்ரைம் ரிப்போட்டர் கதிரவன்.
ஆனால் நிருபர் கதிரவன் பேச்சுக்கு அவர் பயப்படாமல் ‘சார் உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு க்ரைம் நிருபர் கதிரவன், பொதுமக்களிடம் நம்பகமான தனது தொலைக்காட்சியில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் புகார் அளிக்க வந்தவரிடம் பணம் கேட்டதாக செய்தி வெளியிட்டுள்ளார். இது நேர்மையான ஊடக நிருபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது உள்ள நம்பகத்தன்மை கேடுப்பதாக அமைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாநில உளவுத்துறை அனைத்து தகவல்களையும் சேகரித்து, தலைமைக்கு ரிப்போர்ட் அளித்துள்ளது. பொதுவாக காவல்துறையில் குறிப்பாக போக்குவரத்து துறையில் இரும்பு பேரிகேட், பிளாஸ்டிக் தடுப்புகள் உள்ளிட்ட உபகரணங்களை பெரிய தொழில் நிறுவனங்களிடம் ஸ்பான்சர் மூலம் தான் பெறப்படுகிறது. அதேபோல் ஒரு காவல் நிலையத்திற்கு தேவையான சில தொழில் நுட்ப பொருட்களை விருப்பம் உள்ள நபர்களிடம் ஸ்பான்சர் வாங்குவது பெரிய குற்றம் இல்லை. இது காலக்காலமாக நடந்து வரும் விஷயம் தான். ஆனால் இந்த விவகாரத்தை தெரிந்து க்ரைம் நிருபர் கதிரவன் இன்ஸ்பெக்டரை மிரட்டி ரூ.5 லட்சம் பெற முயன்ற சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் தான், ஜெம் வீரமணி வழக்கில் சாந்தி ஊரை சேர்ந்த தினசரி ஆங்கில பத்திரிக்கை நிருபர் ஒருவர், சாந்தியிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு, சாந்தியுடன் இணைந்து ஜெம் வீரமணியிடம் பேரம் பேசியுள்ளார். அந்த பேரம் படியாததால் அவர் தனது நண்பரான தவெக பத்திரிக்கையாளர் பிரிவை கவனித்து வரும் சபீர் அகமது உதவியுடன் தனது ஊடக நண்பர்களான க்ரைம் நிருபர்கள் மற்றும் யூடியூபர்கள் அக்யூஸ்ட் வராகி, கஞ்சா சங்கர் உதவியுடன், இந்த வழக்கில் பல கோடி ரூபாய் பணத்தை போலீஸ் அதிகாரிகள் பெற்று கொண்டு, வீரமணிக்கு ஆதரவாக வழக்கை முடித்து விட்டனர் என்று செய்திகளை போட வைத்து, ஒரு கட்டத்தில் செய்தி தொலைக்கட்சி நிறுவனங்களும் இது உண்மை என்று நினைத்து ெதாலைக்காட்சி விவாத நிகழ்ச்சி எல்லாம் நடத்தியது. தங்கள் திட்டத்தை ஆங்கில பத்திரிக்கை க்ரைம் செல்வராஜ் மற்றும் யூடியூபரான சபீர் அகமது ஆகியோர் க்ரைம் நிருபர்களுடன் இந்த வழக்கை காவல்துறை மீது மாற்றிவிட்டு, அவர்கள் தப்பி விட்டனர். ஆனால் அவர்கள் சாந்தி மற்றும் வீரமணியிடம் வாங்கிய பணத்தை மறைப்பதற்காக தங்கள் பணியாற்றும் ஆங்கில பத்திரிக்கை நிறுவனம் மற்றும் தொலைக்காட்சிகளை ஏமாற்றி தங்கள் நினைத்ததை சாதிக்க நினைத்து தோற்று விட்டனர். அதை ஊடக நிறுவன முதலாளிகளும் நமது நிருபர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மை என்று நினைத்து பதிவிடுவது தான் வேதனையான விஷயமாக உள்ளது. இவர்களை நம்பி செய்தி போட்ட பல தொலைகாட்சி செய்தி ஆசிரியர்கள் வழக்கில் சிக்கும் காலம் வரப்போகிறது.
இதுபோன்ற மோசடி மற்றும் பணம் பறிக்கும் நிருபர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஸ்பெக்டரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறிக்க முயன்றுள்ளனர். இந்த விஷயத்தில் கமிஷனர் நேர்மையானவர். காவல்துறையில் பொதுமக்களிடம் யார் லஞ்சம் பெற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘லஞ்ச ஒழிப்பு பிரிவு’ தொடங்கி அதன் மூலம் குற்றம் செய்த போலீசார் மீது கடுமையான தண்டனை அளித்து வருகிறார். ஆனால் அவர் கீழ் பணியாற்றும் இன்ஸ்பெக்டரையே தனியார் தொலைக்காட்சி க்ரைம் நிருபர் கதிரவன் மிரட்டி ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று ேநர்மையான ஊடக நிருபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இந்த குழுவில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாக குழுவினருக்கு வணக்கம்…. இந்த அறிக்கையில் பத்திரிகையாளர்கள்குள் பகமை, தீய சக்திகள் என பல வார்த்தைகள் உள்ளது .. நீங்கள் யாரை குறிப்பிட்டுள்ளீர்கள் என தெளிவுப்படுத்த வேண்டும்.. புகார்தாரான என்னையா? அல்லது வேறு சிலரையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.. எனது தரப்பு விளக்கமும் சில கேள்விகளும்.
நான் பத்திரிகையாளர் மன்ற தலைவர் மீது குறிவைத்து புகார் அளிக்கவில்லை ..யார் அவதூறு பரப்பினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்பதே எனது புகார்.. இதே குழுவில் என்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் வகையில் மிக முக்கியமான போக்சோ வழக்கில் எனது பெயரை குறிப்பிட்டு பதிவிட்டார்கள்..
இதில் மட்டுமல்ல பல்வேறு குழுக்கள், சமூக வலைதளத்தில் என்னை குறித்து குற்றம் சாட்டும் வகையில், என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரே மாதிரியான பதிவை பகிரப்பட்டது.. அந்த பதிவு என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தின் நிம்மதியையும் பாதித்தது.


நான் சட்டத்தை தான் நாடினேன். காவல்துறையில் முறையாக புகார் அளித்தேன். அதற்கு முன்பாக இதே குழுவில் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளை நடவடிக்கை எடுக்க வேண்டுக்கோள் விடுத்தேன். ஏன் முறையாக புகாரும் அளித்துள்ளேன்… ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரிகள் அல்ல.நான் யாரையும் தனிப்பட்ட பழிவாங்கவும் இல்லை.. இது எனது தொழில் நேர்மைக்கான போராட்டம்..
ஆனால் சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஒரு சக செய்தியாளருக்கு குரல் கொடுக்காமல் மன்ற உறுப்பினர் கொடுத்த புகார் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இன்று (23.10.2026) வெளியிட்ட அறிக்கையில், நான் கொடுத்த புகாரை “சக பத்திரிகையாளரை பழிவாங்கும் செயல்” போலவும், “சதி” போலவும் சித்தரித்துள்ளது.
ஒரு பத்திரிகையாளர் பாதிக்கப்பட்டால் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டிய மன்றம், புகாரை விசாரிக்காமல், பாதிக்கப்பட்ட என்னை “பகைமை ஏற்படுத்துபவன்”, “தீய சக்தி” என்று சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? இது தான் பத்திரிகையாளர் ஒற்றுமையா?


இந்த வழக்கு தனிப்பட்ட விரோதம் அல்ல. ஒரு பத்திரிகையாளனின் சுயமரியாதைக்கான போராட்டம். இனி வரும் இளம் செய்தியாளர்களோ, சக செய்தியாளர்களோ இதே போல பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலே நான் சட்ட நடவடிக்கை மேற்கொண்டேன். சிலர் பகிர்ந்த இந்த தகவலை நம்பியோ, குற்றசாட்டால் நான் பணியிழக்கும் சூழல் ஏற்பட்டு இருந்தால் யார் பொறுப்பு? இதற்கு பத்திரிகையாளர் மன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே என் கேள்வி..
குறிப்பு :பத்திரிகையாளர்கள் மன்ற வாட்சப் குழு இல்லாததால் இதில் பகிர்ந்துள்ளேன். அறிக்கை வெளியிட்ட மன்ற நிர்வாக குழுவினர் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.. என்று ரிப்போட்டர்ஸ் கில்ட்டு குழுவில் தனது ஆதங்கத்தையும் தனது நியாயமான கேள்விகளை கேட்டுள்ளார். இதற்கு சென்னைபிரஸ்கிளப் நிர்வாகிகள் பதில் சொல்வார்களஅ என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.