#special story, #Tiruvannamalai story, #karthigai deepam, #annamalaiyar, #police protection, #district administration
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபத் திருவிழாவில் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பல லட்சக்காண மக்கள் வந்து அண்ணாமலையாரை தரிசித்து விட்டு போவது வழக்கம்.


24-11-2026 கார்த்திகை அன்று நடந்த திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக காவல்துறையின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிர்வாக திறமையற்ற திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக ஆட்சியர் சரியான பாதுகாப்பு வசதிகளையும் பொது மக்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது குறித்து சரியான வழிகாட்டுதல்களை காவல்துறைக்கு அளிக்கவில்லை என்கின்றனர் சில காவல்துறை அதிகாரிகள்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையின் மொத்தம் சுற்றளவு14 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட வில்லை என்பது தான் பக்தர்களின் ஆதங்கம்.



ராஜகோபுரத்தில் தொடங்கும் கிரிவலம் 14 கிலோமீட்டர் மலையை சுற்றி வந்து மீண்டும் ராஜகோபுரத்திலேயே முடிவடையும். ராஜகோபுரம் வழியாக உள்ள இரு பக்கத்திலும் நடை பாதை கடைகள் ஆக்கிரமித்து பக்த கோடிகளுக்கு பெரும் இடைஞ்சலையும் ,மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
ஆனால் பெரும்பாலான நகைக்கடைகள், பிரியாணி கடைகள் குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களின் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான முடவாட்டுக்கிழங்கு சூப்புகளும், கடைகளும், தேநீர் கடைகளும், இளநீர் கடைகளும், கரும்பு ஜூஸ் கடைகளும் ஆக்கிரமித்து இருந்தது.


ஒவ்வொரு கடையினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு பணம் செலுத்துவதாகவும் அதேபோல திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினருக்கு கடை ஒன்றுக்கு வியாபாரத்தை பொறுத்து அளவிற்கு பணம் வழங்கப்படுவதாகவும் பல வியாபாரிகள் தெரிவித்தனர்.
இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு சரியான மாவட்ட நிர்வாகம் எந்த சிறப்பு நடவடிக்கைகளையும் கையாளவில்லை. அதாவது மழை பெய்த காரணத்தினால் பல இடங்களில் சேரும் சகதியமாக இருந்தது அதன் அடிப்படையில் கிரிவலைப்பாதை 14 கிலோமீட்டர் தொலைவு வரை சிறுநீர் கழிக்கப்பட்ட நாற்றமும், மலம் கழிக்கப்பட்ட துர்நாற்றமே வீசியது.


தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஆனால் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பணிகளை முறையாக செய்யாமல் அவர்களும் கிரிவலப் பாதையில் நடக்கத் தொடங்கினர் சில அதிகாரிகள் மொட்டை அடித்து தனது வேண்டுதலையும், நேர்த்திக்கடனையும் செய்து முடித்தனர்.


தனியார் அமைப்பை சார்ந்த பலர் அதாவது பல அமைப்புகள் ஜிஆர்டி நகைக்கடை, உள்ளூர் உள்ள நகைக்கடைகள் பல்வேறு நிர்வாகத்தினர் குடிநீர், சாப்பாடு, பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை வழங்கினர். ஆனால் அந்த வழங்கப்பட்ட உணவுகளின் கழிவுகளை முறையாக குப்பைத் தொட்டியில் போடுவதற்கு எந்த வசதிகளையும் திருவண்ணாமலை நிர்வாகமும் செய்யவில்லை, தனியார் நிர்வாகிகளும் செய்யவில்லை.




கிரிவலப் பாதையின் இருபுறத்திலும் நடை பாதை கடைகள் அமைக்க நிர்வாகம் அனுமதி அளித்தது மிகப்பெரும் அதிர்வையும், அறிவு கெட்ட முட்டாள்தனத்தையும் பக்தர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் இல்லாத கடைகள் என்று எதுவுமே இல்லை மனிதர்களுக்கு தேவையான அத்தனை பொருட்களும் இருபுறத்திலும் விற்பனை செய்யப்பட்டது இல்லாத கதை என்று சொன்னால் சாராயக்கடைகள் மட்டுமே இல்லை.


பொதுமக்களுக்கும் ,பக்தர்களுக்கும் பெரும் இடையூரை ஏற்படுத்திய இந்த நடைபாத கடைகளுக்கு அனுமதி அளித்தது யார் என கேட்டபோது எல்லாம் காவல்துறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் தான் இந்த கடைகள் அமைக்கப்பட்டது என்று தெரிவித்தனர் சில நடைபாதை கடைகள் வைத்திருந்த நபர்கள்.
இதனால் யாரும் தாராளமாக அல்லது நோய் தொற்று ஏற்படாத வகையில் செல்வதற்கான கிரிவலம் செல்வதற்கான எந்த வாய்ப்புகளும் சூழலும் ஏற்படவில்லை. கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டும் கூட்ட நெரிசலிலும் கைக்குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல பக்த கோடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடும் மன குளச்சலுக்கு ஆளாகினர்.