‘எலன் மஸ்க் சொன்னது சரி தான்’னு நிரூபணமாகிட்டு இருக்கு!
”இந்தியாவின் உண்மையான பாஸ் மோடியா? அம்பானியா?” என்று எலன் மஸ்க் கேட்டதுக்கு தன் செயல் மூலம் பதிலளித்துவிட்டார், அமெரிக்க வெளியுறவு துறை தலைவர் மார்கோ ரூபியோ!
![]()
வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்காவின் சக்தி வாய்ந்த தலைவரும், வெளியுறவுத் துறையை நிர்வகிப்பவருமான ஒருவர் இந்தியாவுக்கு வந்து பிரதமரை சந்திக்காமல், அம்பானியை சந்தித்து சென்றது நம்ப முடியாத அதிர்ச்சியாகும்.
அம்பானியை சந்திப்பதற்காக நேரடியாக மும்பை வந்த மார்கோ ரூபியோ அம்பானியை சந்தித்து உரையாடிவிட்டு, அவரது மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இருக்கும் குஜராத்திற்கும் விசிட் அடித்தாரேயன்றி, டெல்லி செல்லவில்லை. பிரதமர் மோடியை பார்க்கவில்லை. ஆனால், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தான் வலிய வந்து மார்கோ ரூபியை சந்தித்துச் சென்றார்.

இதன் மூலம் அமெரிக்கா இந்தியாவில் பிரதமர் முக்கியம் இல்லை, அந்த பிரதமரையே ஆட்டி வைக்கும் அம்பானி, அதானிகளே சக்தி வாய்ந்தவர்கள் என்பதை உலகத்திற்கே உணர்த்தியுள்ளது.
மார்கோ ரூபியோ ஒரு மரியாதை நிமித்தமாகவாவது பிரத்மர் மோடியை சந்தித்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு போயிருக்கலாம். அந்த அளவுக்கு கூட சந்திக்க வேண்டிய தேவையில்லை என அவர் நினைக்குமளவுக்கு நமது பிரதமர் மோடி நடந்து கொண்டிருக்கிறார் போலும்!

இதை கேள்வி கேட்கும் தைரியம் கூட மோடிக்கு வரக் கூடாது என்று தான் மார்கோ ரூபி வருவதற்கு முன்பு பாலியல் புரோக்கர் எஸ்டீனுடன் நமது மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேசிக் கொண்டிருக்கும் போட்டோவை அமெரிக்கா பொது வெளியில் எடுத்து வெளியிட்டது.
அடுத்து ‘தான் எப்ஸ்டீனுடன் இருக்கும் படமும் வந்துவிடக் கூடாதே..’ என்று மோடியை பதற வைத்து விட்டு, கூலாக அமெரிக்க தலைவர் மார்கோ ரூபியோ வருவதை என்னென்பது?

ஒரு இந்தியக் குடிமகனாக பார்க்கும் போது மோடிக்கு ஏற்பட்ட அவமானம் நமக்கான அவமானமாகத் தான் உள்ளது. இப்படிப்பட்ட பிரதமர் நமக்கு வாய்ந்திருக்கிறார், என்ன செய்வது? தன்னுடைய வெளிநாட்டு பயணங்களில் எல்லாம் இந்தியாவிற்கான நன்மைகளை விட அதானியோ, அம்பானியோ அந்த நாடுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை குறித்தே மோடி செயல்பட்டதன் விளைவே இது!
இதனால் தான் அமெரிக்க தலைவர் மார்கோ ரூபியோ, ”நீ அவங்களோட வேலைக்காரன் தானே! உன்னை என்ன சந்திப்பது? உன் முதலாளியையே நாங்க பார்த்துக்கிடறேன்’’னு அவங்க முடிவுக்கு வந்துட்டாங்க…!
இந்த லட்சணத்தில் இந்தியாவின் மாநில முதல்வர்கள் வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை என ஏகப்பட்ட கெடுபிடிகள் காட்டி வருவதாகும்.

/theprobe/media/media_files/2026/06/26/mamata-banerjee-2026-06-26-01-31-09.jpg)
இந்தக் கெடுபிடிகளால் அரவிந்த் கெஜ்ரிவல், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை போட்டு தடுத்த ஆகாத்தியங்கள் எல்லாம் அடுக்குமா?
பிரதமரே ஒரு அடிமை. அதனால், அவரும் மாநில முதல்வர்களை அடிமையாக்கப் பார்க்கிறார்.