கோவை காந்திபுரத்தில் புதிய செல்போன் கடை ஒன்றை நடிகை த்ரிஷா நேற்று முன் தினம் திறந்து வைத்தார். இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்தபோது, செய்தியாளர்கள், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் கடந்து சென்றார்.
அவர் வருவதை ஓட்டி, கோவை காந்தி புரம் நூறடி சாலையில் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் கூடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
த்ரிஷாவை பார்ப்பதற்கு கடையின் முன்பு, ரசிகர்களும் பொதுமக்களும் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும் த்ரிஷாவின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்களும் அவர்களை மேலும் முன்னேறாமல் தடுத்தனர்.
#trisha feels the tension ; கோவை ரோடு ஷோவில் ”மைக் ஆப்” டென்ஷனில் த்ரிஷா….
October 26, 2026
By ரா. ஹேமதர்சினி
ரா. ஹேமதர்சினி
October 26, 2026
