#Baththa; நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா படம் குறித்து எழுத்தாளர் சமரநாகன் பதிவு.

November 2, 2026

By இரா. தேவேந்திரன்.

காலர-அ தான் தூக்கி விட்டா
கலவரம் ஸ்டார்ட்டு’

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் பேஸ்புக் வீடியோக்களில் இன்றளவும் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் அந்த மாஸ் சாங் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்திருக்கும் பத்தா படத்தில் தான் வருகிறது.

விஜய் சேதுபதி…

ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதைவிட, அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழிக்குள் தன்னை ஒப்படைத்துவிடும் நடிகர்.

பத்தாவின் கோபம், மிரட்டல், இயலாமை, குடும்பத்தின் மீதான பாசம் என முரண்பட்ட உணர்வுகளை இயல்பாகக் கடத்துகிறார் விஜய் சேதுபதி.

குழந்தைகளாக இருக்கும்போது நாம் கேள்விப்படும், பார்க்கும், கதையளக்கும் விஷயங்கள் மனதில் எவ்வளவு ஆழமான பதிவை ஏற்படுத்துகிறது;

ஒரு குழந்தையின் பிஞ்சு மனதில் ஓடும் பயம், பதற்றம், குற்றவுணர்வு, மற்றும் யோசனைகள் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகின்றன;

குழந்தைகளின் உலகத்தை நாம் எவ்வளவு மேலோட்டமாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்த திரைப்படம் வழியே நமக்கு சுட்டிக்காட்டுகிறார் இயக்குனர்.

அல்ல போலேலோ..

மோனிகா பெல்லுச்சி.. என்று

பூர்ணாக்களையும், பூஜாக்களையும் ஆடவிட்டு ரசித்துக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் சினிமாவில்தான்,

கதாநாயகிகளை வெறும் அலங்காரப் பொருளாகக் கையாளும் போக்கிலிருந்து விலகி, கதையின் மையத்தில் அவர்களை நிறுத்தும் மாற்றமும் நடந்து வருவது கவனத்துக்குரியது.

வெகுகாலமாய் தமிழ்சினிமா தனது கதாநாயகிகளைக் கையாண்ட மரபுகளையும், வார்ப்புகளையும் சமீபகாலமாகச் சில திரைப்படங்கள் மீறியிருக்கின்றன.

அந்த வகையில்…
மண்டாடி – ஏஞ்சல் ராக்கம்மா
பத்தா – கனிமா

வெறும் நெற்றிப்பொட்டும் மூக்குத்தியும் மட்டுமே ஒரு பெண்ணைப் பேரழகியாகக் காட்டும் என்பதற்கு கனிமா ஓர் உதாரணம்.

படம் முழுக்க சிரிப்பும் பரிதவிப்புமாய் அட்டகாசமாய் நடித்திருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமும் கொள்ளை அழகு.

கதாநாயகிகளின் அழகை ரசிப்பதைக் கடந்து, அவர்களின் கதாபாத்திரங்களை ரசிக்கத் தொடங்கியிருப்பதுதான் தமிழ் சினிமாவின் சமீபத்திய சின்னதொரு நம்பிக்கை.

பக்தா திரைப்படத்தில் நடித்திருக்கும் பத்தாவின் மகள், சபரியின் பெற்றோர், சபரியின் பள்ளி தோழர்கள், ஓரிரு ஃப்ரேம்கள் மட்டுமே வந்து போகின்ற அந்த நைனா உள்பட, படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அட்டகாசமாக நடித்து இருக்கிறார்.

முதல் படத்திலேயே ஹிட்டடித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி மங்கி போகின்ற தமிழ் சினிமா ஹீரோக்களின் சென்டிமெட்டுகளை உடைத்து, திரை வானில் சூப்பர் ஸ்டாராய் பிரகாசிக்கட்டும் சபரி!

ஆம்! படத்தின் ஹீரோ சபரி தான்!

Share:

இரா. தேவேந்திரன்.

November 2, 2026