#corruption at the Periyar Library; பெரியார் நூலகத்தில் விஞ்ஞான ஊழல்.

November 11, 2026

By இரா. தேவேந்திரன்.

பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. அந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த செய்தி தீவிரமாக பரவி வருகிறது.

விஞ்ஞான நூலக ஊழல் நடந்தது எப்படி?

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் நடக்கும் ஊழல் இப்போது தொடங்கியது அல்ல. பல ஆண்டுகளாகவே இந்த ஊழல் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில்தான் இந்த ஊழல் பெருமளவு அரங்கேறியிருக்கிறது. அதற்குக் காரணம் திமுகவில் உள்ள அறிவுஜீவிகளின் சிண்டிகேட். இவர்களை “திராவிட மாஃபியா” என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
“திராவிட சித்தாந்தங்களை” மேடைதோறும் பேசும் நபர்களே இந்த முடைநாற்றமெடுக்கும் அருவருக்கத்தக்க ஊழல்களில் ஈடுபடுகிறார்கள். திராவிட இயக்க ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று திமுக தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு கூட்டம், “பிராமண எதிர்ப்பு, ஆரிய ஆதிக்கம், இந்தித் திணிப்பு, வடவர் ஆதிக்கம், மாநில உரிமை” என்ற பொருட்களில் பேசியும் எழுதியும் வருவது, திமுக அடிக்கும் பேரங்களிலும் கொள்ளைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்ப உதவும் என்பதால், திமுக தலைமை இந்தத் திராவிட மாஃபியாவின் செயல்களைக் கண்டும் காணாமலும் இருந்துகொள்ளும்.

இதற்குப் பிரதிபலனாக திராவிட மாஃபியாவைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு, அரசு குழுக்களில் பதவி, அவர்கள் எழுதிய புத்தகங்களுக்கு நூலக ஆர்டர், திமுக மேடைகளில் இடம் என்ற அளவுக்குச் சலுகைகள் வழங்கப்படும்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில், இந்தத் திராவிட மாஃபியா பெருமளவு கட்டுக்குள் இருந்தது. இந்தத் திராவிட மாஃபியாவைச் சேர்ந்த வைரமுத்துவுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு, நூலக ஆர்டர் போன்ற சலுகைகளை வழங்கி, அதற்குப் பதிலாக வைரமுத்துவைத் தினந்தோறும் அவரது புகழையும், திமுக புகழையும் பாட வைப்பார் கருணாநிதி.

பெரியார் அறிவுலகத்தில் விஞ்ஞான ஊழல்… ஸ்டாலினுக்கு விஜய் சவுக்கடி. - Tamil News Now

2021–2026 திமுக ஆட்சிக் காலத்தில் இந்தத் திராவிட மாஃபியாவுக்குச் செல்வாக்கு அதிகரித்தது. கருணாநிதியைப் போல முக. ஸ்டாலினுக்குப் பேரும் ஆளுமையும் இல்லையென்பதால், திமுக ஆட்சியைப் புகழ்ந்துரைக்கவும், அதன் ஊழல்களை மறைக்கவும் திராவிட மாஃபியாவின் துணை பெரிதும் தேவைப்பட்டது. இந்தக் காரணத்தினால்தான் வெறும் மேடைப் பேச்சாளராக இருந்திருக்க வேண்டிய ஜெயரஞ்சன் போன்றோரை, முக. ஸ்டாலின் திட்டக்குழுத் தலைவராக நியமித்தார். அவரை மிகப்பெரிய சிந்தனைச் சிற்பியாக திமுக கொண்டாடியது.

கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல்: திமுக மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

இன்றைக்குச் சந்தி சிரிக்கும் புத்தகக் கொள்முதல் ஊழலின் சூத்திரதாரியே #ஜெயரஞ்சன்தான்.

திமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிக நூலகங்கள் கட்டப்பட்டன என்பதால், நூல்கள் கொள்முதலில் பெரிய அளவில் பணம் பார்க்கலாம் என்று ஜெயரஞ்சன் திட்டமிட்டார்.
திமுக ஆட்சியில் தமிழக நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்வது அனைத்தையும் இந்தத் திராவிட மாஃபியாதான் முடிவு செய்யும். ஜெயரஞ்சன் தலைமையிலான இந்தத் திராவிட மாஃபியாவை ஸ்டாலின் ஆட்சி பெருமளவு நம்பியிருந்ததன் காரணமாக, இவர்களின் செயல்பாடுகள் எவ்விதக் கண்காணிப்பும் இல்லாமல் போனது.

நூலகங்களில் ஆண்டுக்கு மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் என்று நான்கு முறை நூல்கள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும். வாசகர்கள் விரும்பவில்லை என்றாலோ, புத்தகங்கள் சேதமாகிவிட்டன என்றோ காரணங்களைக் கூறி இப்புத்தகங்களை dispose செய்ய விதிகளில் இடமிருக்கிறது.

Officials clarify when the Periyar Library in Coimbatore will open - 'கோவை பெரியார் நூலகம் திறக்கப்படுவது எப்போது?' – அதிகாரிகள் விளக்கம் என்ன? - Vikatan
இந்த விதியைப் பயன்படுத்தி ஊழல் செய்யத்தான் திராவிட மாஃபியா திட்டமிட்டது. அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பெயர்களில் பதிப்பகங்களைத் தொடங்குவது. லட்சக்கணக்கில் அவர்களிடமிருந்து புத்தகங்களை வாங்குவது. அந்தப் புத்தகங்களை அட்டைப் பெட்டியிலிருந்து வெளியே எடுக்காமல் அப்படியே இரண்டு ஆண்டுகளுக்கு வைத்திருப்பது. இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் அப்புத்தகங்களை dispose செய்வது. இதுதான் இந்தத் திராவிட மாஃபியாவின் திட்டம்.

பெரியார் நூலகம் திறக்கப்பட இருக்கிறது, அதற்குப் புத்தகங்கள் வாங்க 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றதும் ஜெயரஞ்சனுக்குப் பெரிய அளவில் கொள்ளையடிக்கலாம் என்ற ஐடியா உதித்தது. மீண்டும் திமுக ஆட்சிதானே வரப்போகிறது. புத்தகங்கள் அட்டைப் பெட்டியிலிருந்து ஏன் வெளியே வரப்போகிறது? யாருக்கு இது தெரியப்போகிறது என்று திட்டத்தைத் தீட்டினார்.

MaalaiMalar News | கடந்த 24 மணி நேரத்தில் கோவை பெரியார் அறிவுலகம் புத்தகம் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் ...
வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களை அழைப்பது. அவர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 300 பக்கங்களில் ஒரு புத்தகத்தை உருவாக்கி PDF வடிவில் தரவேண்டும். இப்படி வழங்குவதற்கு ஒரு புத்தகத்துக்கு 2,000 ரூபாய். என்ன நூல், என்ன தலைப்பு, ஆசிரியர் பெயர் என்ன என்பதையெல்லாம் புத்தகத்தை உருவாக்கும் இளைஞர்களே முடிவு செய்துகொள்ளலாம். இந்தக் காரணத்தினால்தான் நூலாசிரியர்களின் பெயர்கள் “திரிஷா விஜய், விஜய் செல்வம், சுமேகா விஜய், பவித்ரா கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதி” என்று இருக்கின்றன.

திமுக ஆட்சி வந்திருந்தால் இந்த ஊழல் வெளியே வந்திருக்கவே வந்திருக்காது. ஏனெனில், திரிஷா விஜய், கமலாம்பாள் கருணாநிதி உள்ளிட்டோர் எழுதிய நூல்கள் அட்டைப் பெட்டியை விட்டு வெளியே வந்திருக்காது.

தவெக ஆட்சி வந்ததும், முதல்வர் விஜய் அந்நூலகத்தைத் திறந்து வைத்ததும், அதிகாரிகள் முதல்வர் வருகையின்போது எல்லாப் புத்தகங்களையும் அடுக்கி வைக்க வேண்டுமே என்று “திரிஷா விஜய்” எழுதிய புத்தகங்களையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டார்கள். அப்புத்தகங்களை அலமாரியிலிருந்து மீண்டும் அட்டைப் பெட்டிக்கு அனுப்ப இந்தத் திராவிட மாஃபியா கடந்த நான்கு மாத காலமாக முயன்றிருக்கிறது.

Officials taking bribes; லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். - Chennai Reporters

ஆட்சி மாற்றத்தால் அதைச் செய்ய முடியவில்லை.
பெருமாள் முருகன் போட்டுடைத்துவிட்டார்.
அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் திராவிட மாஃபியா தலைவர் ஜெயரஞ்சனின் #பினாமி நிறுவனங்களே.

இந்த ஊழலில், திமுக தலைமையோ, அமைச்சரோ சம்பந்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் திமுகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் அனுப்பியுள்ளது.

முறையான விசாரணை நடந்தால், ஜெயரஞ்சன் போன்ற போலி அறிவுஜீவிகளின் உண்மை முகம் வெளிப்படும்.
தாமதமின்றி அரசு வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்.

*“படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்” –

 

Share:

இரா. தேவேந்திரன்.

November 11, 2026