#மனதில் உறுதி வேண்டும்
#பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
#வாழ்க்கையில் விடாமுயற்சி முக்கியம்
#பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
#வாழ்க்கையில் விடாமுயற்சி முக்கியம்
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் நண்பர் வீட்டிலிருந்து திரும்ப ரொம்ப நேரமாகிவிட்டது. மணி இரவு 9-ஐ தாண்டியிருந்தது. Uber Auto புக் செய்து விட்டு சாலையில் தனியாக நின்று கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஓட்டி வந்தது ஒரு அக்கா. முதலில் கன்னடத்தில் தான் பேசினோம்.
அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. போனை எடுத்து, _இருபா வந்துட்டு இருக்கேன்…_ என்று அழகான தமிழில் சொன்னார்.
அந்த ஒரு வார்த்தை என்னை உலுக்கியது.
அக்கா… நீங்க தமிழா? என்றேன்.
ஆமா தம்பி என்று புன்னகைத்தார்.
எந்த ஊரு அக்கா?
தென்காசி பக்கம்…ஒர் ஊர் பெயர் சொன்னார் .

அந்த நள்ளிரவில், பெங்களூருவின் நடுவே ஒரு தமிழ் உறவை பார்த்த உணர்வு
அக்கா இந்த வேலையை எப்போல இருந்து செய்யுறீங்க?” என்று மெதுவாக கேட்டேன்.
சற்று மௌனத்திற்கு பின் சொன்னார், கணவர் இறந்ததில் இருந்து ஓட்டுறேன்பா…
என்ன ஆச்சு அக்கா?
உடம்பு சரியில்லாம போய் சேர்ந்துட்டாருப்பா. அதுக்கப்புறம் பொழப்புக்காக நிறைய வேலை பார்த்தேன். ஒண்ணும் சரிப்பட்டு வரல. வருமானமும் இல்ல. ரெண்டு பொம்பள பிள்ளைகள வச்சிட்டு என்ன பண்றதுனு தெரியல. அதான் இந்த ஆட்டோவை எடுத்தேன். ஆரம்பத்துல ரொம்ப பயமா, கஷ்டமா இருந்துச்சு தம்பி. இப்போ எல்லாம் பழகிப்போச்சு.
இதுல வர்ற காச வச்சு தான் பெரியவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தேன்பா. சின்னவ இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கா.
இருட்டான அந்த சாலையில், அந்த ஆட்டோவின் வெளிச்சத்தை விட பிரகாசமாக இருந்தது அந்த தாயின் முகம். வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களை சொல்லிக்கொடுக்கிறது. அன்று அந்த அக்கா மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம் – தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால், தனியாக நின்றாலும் இந்த உலகத்தையே ஜெயித்து விடலாம்.
இறங்கும் இடம் வந்ததும், அக்கா ஒரு போட்டோ எடுத்துக்கவா? என்றேன். தாராளமா எடுத்துக்கோ தம்பி என்று அந்த தைரியலட்சுமி சிரித்தார். அந்த இரவு எனக்கு வெறும் ஆட்டோ பயணமாக இல்லை. அது தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊக்குவித்த நாள்.