பிரியங்கா வீட்டின் பணிப்பெண்ணுடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஃபோட்டோ எடுத்துக்கொண்ட செய்தி தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி தான் இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் படித்தும் ,பார்த்தும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த செய்திதான் உலகத்தின் ஹாட் டாப்பிக்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார்.
விழா மேடையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இருந்த வேளையில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பிரியங்கா காந்தி ஒரு பெண்ணை திடீரென அழைத்து வந்து முதலமைச்சர் விஜயிடம் அறிமுகப்படுத்தினார். கடந்த 25 ஆண்டுகளாக என்னுடைய வீட்டில் எனக்கு விசுவாசம் ஆக உணவு சமைத்து வரும் பணியாளர் இவர் என்று அறிமுகப்படுத்தினார்.
இவருக்கு உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்தார். இதை கேட்டதும் சற்றும் யோசிக்காமல் புன்னகையுடன் முதலமைச்சர் விஜய் அந்த பெண்ணை அருகில் அழைத்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று அவரிடம் மிகுந்த அன்போடு நலம் விசாரித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது தமிழக அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. தன் மனதில் 22 ஆண்டுகளாக சுமந்து வந்த நீண்ட நாள் ஆசையை ஒரே வினாடியில் பிரியங்கா காந்தி சுலபமாக்கி கொடுத்தார். அந்த பெண் முதலமைச்சர் விஜய்க்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற மாபெரும் அரசியல் விழாவில் தன் வீட்டில் பணியாற்றும் பனிப் பெண்ணின் ஆசையை நினைவில் வைத்து பிரியங்கா காந்தி அதை தமிழக முதலமைச்சருடன் கொண்டு சென்று அவரை அறிமுகம் செய்து வைத்து நடந்து கொண்ட அந்தப் பண்பு எளிமை அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தற்போது இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பிரியங்கா காந்தி வீட்டில் பணியாற்றும் அந்த பனிப் பெண்ணின் பெயர் அவர் குறித்த எந்த தகவலும் எந்த செய்திகளிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்காவின் பெருதன்மையை தமிழ காங்கிரஸ் கட்சியினரும் தமிழக முதலமைச்சரின் பன்பையும் பெருமையுடன் பேசி வருகின்றனர் தமிழக மக்கள்.