சாலையில் சீன் போட்ட பா.ஜ.க. பெண் நிர்வாகி. தட்டி தூக்கிய போலீஸ்..

November 4, 2023

By தே. ராதிகா

அரசு பேருந்தை வழிமடக்கி டிரைவர் மற்றும் நடத்துனரை மிரட்டி மாணவர்களை அடித்து ஆபாசமாக பேசிய பாஜக பெண் நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருப்பவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர்  குன்றத்தூரிலிருந்து போரூர் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில்  தொங்கிய படி பயனம் செய்து கொண்டிருந்தனர்.


அப்போது அந்த பேருந்தை வழிமறித்த நடிகை ரஞ்சனா சாலையில் இறங்கி டிரைவரிடம் சரிமாரி கேள்விகளை எழுப்பினார். பேருந்தில் இப்படி பயணிப்பவர்களை நீங்கள் செருப்பால் அடித்திருக்கலாமே! அங்க பாருங்க ஒருத்தன் மேல் ஏறுகிறான் என்றார். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


உடனே பேருந்தின் பின்வாசலுக்கு சென்ற ரஞ்சனா அங்கு படியில் நின்று கொண்டிருந்த  மாணவர்களை இறங்குடா கீழே, இறங்குடா நாயே என சொல்லி மாணவர்களை வெளியே தள்ளினார். வர மறுத்த மாணவர்களை  படியில் ஏறி சென்று தலையிலும் கன்னத்திலும் ஓங்கி அடித்து கீழே இறக்கினார். பின்னர் நடத்துனரை பார்த்து ஒருமையில் பேசினார் உனக்கு அறிவு இல்லையா இப்படி படியில் தொங்குவதை பார்த்துக்கிட்டு இருக்கே, அறிவு கெட்ட நாயே என திட்டினார்.

நடிகை ரஞ்சனாவின் நோக்கம் சரி என்றாலும் அதை அவர் கையாண்ட விதம் தவறு என்று சொல்கிறார்கள் பொது மக்கள். மாணவர்களை கீழே இறக்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களை அடித்ததும், நாயே என பேசியதும் கண்டக்டரை ஒருமையில் பேசியது போன்ற செயல்கள் அநாகரீகமற்றது என்கிறார்கள் பொது மக்கள்.

இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர் சரவணன் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீஸார், கெரும்பாக்கத்தில் உள்ள நடிகை ரஞ்சனா வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர்.

நடிகை ரஞ்சனா பொதுவெளியில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள சாலையில் இறங்கி சீன் போட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆபாசமாக பேசியது பள்ளி மாணவர்களை அடித்தது போன்ற செயலுக்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மாங்காடு போலீசார் அவரை கைது செய்தனர் இந்த சம்பவம் பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share:

தே. ராதிகா

November 4, 2023

Leave a Comment