தமிழ்நாட்டில் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் தனி தாராபுரம் தனி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது மதியம் 3 மணி நிலவரப்படி இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது.


தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது இது தமிழக வெற்றி கழக அரசின் நான்கு மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாக பார்க்கப்படுகிறது மதுராந்தகம் தனித் தொகுதியில் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்து வருகிறார்.


அதேபோல தாராபுரம் தொகுதியில் 21 ஆவது சுற்று முடிவில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமா 62 ஆயிரத்து 596 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர் சுகன்யாவும் அதிமுக வேட்பாளரும் பின்தங்கியுள்ளனர். கடைசி கட்ட நிலவரப்படி சத்தியபாமா 66,586 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 56,757 வாக்குகள் பெற்றுள்ளார். 98,29 வாக்கு வித்தியாசத்தில் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா.
மதுராந்தகம் தொகுதியை பொருத்தவரை 20வது சுற்றில் 46 ஆயிரத்து 895 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து திமுக வேட்பாளர் பரந்தாமன் 32,786 வாக்குகளை பெற்றுள்ளார். கடைசி கட்ட நிலவரப்படி மரகதம் குமரவேல் 49,953 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 36,423 வாக்குஎள் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 13,530 வாக்கு வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல்.
அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் பின்தங்கியுள்ளார் மதுராந்தகம் தொகுதி முறப்பாக்கும் பகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று சீல் வைக்கப்படாமல் திறந்த நிலையில் இருந்ததால் திமுக தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம் ஏற்பட்ட ஏற்பட்டதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஒவ்வொரு வாக்குப்பதிவேந்திரமும் முறையாக சீல் வைக்கப்பட்டு அதற்கான விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் பின்னர் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். இந்த நிலையில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் திறந்த நிலையில் இருந்ததால் திமுக தரப்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டது.
பொதுவாக தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சி ஆளுங்கட்சியாக ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிதான் இடைத்தேர்தலில் பெரும்பாலும் வெற்றி பெறும் சில நேரங்களில் எதிர்க்கட்சி வெற்றி பெற்ற வரலாறும் உண்டு தமிழ்நாட்டின் மிக முக்கிய இரண்டு கட்சியான திமுக மற்றும் அதிமுக தோல்வியை தழுவியிருப்பது தங்கள் கட்சியின் நிர்வாகிகள் செயல்படாத தையே காட்டுகிறது என்கின்றனர் பொதுமக்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின் மதுராந்தகம் தொகுதியின் தனித் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை உருவ கேலி செய்து பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
இனி திமுகவிற்கு விடியல் கிடைக்குமா?
பெண்ணியவாதிகள் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் அதன் பின்னர் ஸ்டாலினின் பிரச்சாரம் எடுபடவில்லை முட்டாள்தனமாக பேசி முட்டுச்சந்தில் அடைபட்டு விழுந்துவிட்டார் என்றனர் அப்போது தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகிகள் அதேபோல சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விஜய் சினிமாவில் நடிப்பதை போலவே அரசியலிலும் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ஆனால் அவர் கடந்த காலங்களில் சசிகலாவை எப்படி ஏமாற்றி தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்று சசிகலாவுக்கு துரோகத்தை ஏற்படுத்தினார் என்பதை மறந்து விட்டு பேசினார் மறந்து விட்டு பேசுகிறார் என்று கடும் கண்டனத்தை எழுப்பி வந்தனர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருப்பினும் இந்த நிலையில் அரசியலுக்கு புதிய வரவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் மக்களும் இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த இரண்டு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
தமிழகத்தின் எல்லா மூளை முடுக்குகளிலும் விசில் சத்தம் விண்ணை முட்டுகிறது. வெற்றி கொண்டாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் அடிக்கும் விசில் பொதுமக்களின் காதுகளையும் திமுக தொண்டர்களையும் அதிமுக தொண்டர்களையும் காதில் புகை வருகிற அளவிற்கு விசில் சத்தம் கேட்கிறது.