புதுச்சேரியின் மூத்த அரசியல்வதியும் முன்னாள் அமைச்சருமான கண்ணன் மறைவு.

November 6, 2023

By இரா. தேவேந்திரன்.

பான்டிச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வதியுமான  கண்ணன் உடல் நலக்குறைவல் உயிரிழந்தார். அவரது  மறைவுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அளிக்க காரைக்கால் திமுக கோரிக்கை வைத்துள்ளனர்.

 

புதுச்சேரி மாநிலத்தில் இரு முறை அமைச்சராகவும், சபாநாயகராகவும், எம்.பி யாகவும் பணியாற்றி மாநில வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு அயராது உழைத்து அனைத்து தரப்பு மக்களிம் அன்பை பெற்ற திரு.கண்ணன் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

திரு.கண்ணன் அவர்களின் மறைவையொட்டி நாளைய தினம் (06.11.23) அரசு விடுமுறை அளித்து, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் வேண்டும் என திமுக அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை  வைத்துள்ளார். இவரது மறைவு புதுச்சேரி மக்களுக்கும் அவரது தொண்டர்களுக்கும் பேரிழப்பு ஆகும்.

Share:

இரா. தேவேந்திரன்.

November 6, 2023

Leave a Comment