தைப்பொங்கல் தினத்தன்று டாஸ்மாக்கில் 518 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் நல்ல நிகழ்ச்சி அல்லது துன்ப நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் மதுவும், மாமிசமும் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.


நண்பர்கள், உறவினர்கள், தனியார் சொல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என எல்லா தரப்பு மக்களும் அனைவரும் பார்ட்டி வையுங்கள் என்று வாய்விட்டு கேட்கும் அளவிற்கு நாகரிகம் வளர்ந்து விட்டது என்கின்றனர் மூத்த குடிமக்கள் சிலர்.



தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 3640 டாஸ்மாக் கடைகளில் பார் வசதிகள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரி ரூபாய் 150 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நடைபெறும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் சற்று விற்பனை கூடுதலாக இருக்கும். மேலும், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற விழா நாட்களில் கணிசமான மது விற்பனை நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அதாவது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூபாய் 400 கோடி அளவிற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் போகிப் பண்டிகை மற்றும் தைப்பொங்கல் ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் ரூபாய் 518 கோடி அளவிற்கு தமிழகம் முழுவதும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:


இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சுமார் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 14ஆம் தேதி போகிப் பண்டிகையின் போது ரூபாய் 217 கோடியும், பொங்கல் பண்டிகையின் போது ரூபாய் 31கோடியும் என இரண்டு நாட்களில் ரூபாய் 518 கோடி அளவிற்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலம் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.
அதன்படி சென்னை ரூபாய் 98.75 கோடி அளவிற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை 95.78 கோடியும், திருச்சி 85.13 கோடியும், சேலம் 79.59 கோடியும், கோவை 76.2 கோடி எனவும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி டாஸ்மாக் கடைகளை தவிர்த்து உரிமம் பெற்ற பார்கள் மூலம் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளன.
சென்னை, மதுரை, கோவை, நெல்லை, பாண்டிச்சேரி போன்ற மாநகரங்களில் உள்ள ஹோட்டல்களில் உள்ள விற்பனையில் செய்யப்பட்ட மதுபானத்தின் மொத்த விற்பனையும் வழக்கத்தை காட்டிலும் 10% உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரூபாய் 90 கோடி அளவிற்கு மது விற்பனையாகியுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.
இந்த வருவாய் அதிகரிப்பின் மற்றொரு காரணம் பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் என்பதால் அதாவது மாட்டுப் பொங்கல் அன்று டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் மூடப்படும் இதனால் பெரும்பாலானோர் பொங்கல் அன்று மதுவாங்கி வைத்துள்ளதால் விற்பனை சற்று அதிகரித்துள்ளது இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜனவரி 14,15,16 ஆகிய மூன்று நாட்களில் ரூபாய் 725 கோடி அளவிற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் பொங்கல் சமயத்தில் இரண்டு நாட்களில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 455 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூபாய் 64 கோடி வரை கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. மது விற்பனையின் மூலம் வரும் நிதி அரசின் முக்கிய பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்தி.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் “லிமோன் பக்கார்டி” எனப்படும் ஒயிட் ரம் தற்போது விற்பனை செய்யப்படுவதில்லை.
டாஸ்மாக் மதுக்கடைக்கு சொந்தமான எலைட் எனப்படும் மதுக்கடைகளில் கூட ஃபுல் பாட்டில் லிமோன் பக்கார்டி கிடைப்பதில்லை. காரணம் எம் ஜி எம் லிமோன் பக்கார்டி, தான் குவாட்டர் பாட்டில் ஆஃப் பாட்டில், ஃபுல் பாட்டில் கிடைக்கிறது. விற்பனையாளர்களிடம் கேட்டால் தற்போது தான் காலியானது என்ற ஒரே பதிலையே தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் சேல்ஸ்மேன்கள், சூப்பர்வைசர்கள் ஒத்த பதிலையே சொல்லி வருகின்றனர். எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான லைமன் வோட்கா தான் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான பதிலை எந்த அதிகாரிகளும் சொல்லாமல் தற்போது தான் தீர்ந்து விட்டதே காலியாகிவிட்டது என்று ஒரு பொய்யான பதிலை சொல்லி வருகின்றன.