#Child sexually assaulted; சிறுவனுக்கு பாலியல் தொல்லை. ஏட்டு சஸ்பெண்ட்.

May 30, 2026

By ச. ஜெனித்

16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த புகாரில் வடபழனி காவல் நிலையத்தில் உள்ள தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.

காக்கிச்சட்டையில் ஒரு கருப்பு ஆடு;

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் குடும்பத்துடன், சிறுவாபுரி முருகன் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோவில்களுக்கு சென்று வந்தனர்.Tamil Nadu Man Dies By Suicide, Daughter Follows Suitஅதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் 26-ம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் 2 நாள் தங்கியிருந்து வருவதாக கூறியதால் அவரை மட்டும் அங்கு விட்டுச் சென்றனர். இந்நிலையில், 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான வேலப்பன் (35) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.Senior IPS officer Mahesh Kumar Aggarwal appointed Head of the Tamil Nadu Police - The Hinduடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்

சிறிது நேரத்தில் குமரேசன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். ஆனால், போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார். மேலும், சிறுவனிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வடபழனி தலைமைக் காவலர் பணி நீக்கம்|Vadapalani head constable dismissed for sexually harassing a boyஇதனால்,பயமும் அதிர்ச்சியும் அடைந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பினார்.

மேலும் அவர் அசோக் நகர் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று,நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து போலீசார் வேலப்பனையும், போதையில் தூங்கிய குமரேசனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் வேலப்பன் கைது செய்யப்பட்டார்.சிறுவனிடம் அத்@துமீ@றிய காவலர் : சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை!

பணி நீக்கம்;

இதைத் தொடர்ந்து, ஆர் -8 வடபழனி காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் வேலப்பனை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடியாகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 311-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை காவலர் வேலப்பனுடைய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை செய்து அவரது குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.Woman Harassment Redressal Cell of Pravara Institute of Medical Sciences University - Medical university, India offering medical education in medicine, biotechnology, physiotherapy, dental, bioscience management, nursing, MBA. Medical College ...ஏற்கனவே தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் இந்த நிலையில் வேலப்பன் சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் அது தவிர சென்னை மாநகரம் முழுவதும் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளை கண்காணிக்க ஒவ்வொரு காவல் மாவட்டத்திலையும் தனி பிரிவு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

காக்கி சட்டை அணிந்து கொண்டு சட்டத்தை தவறாக அணுகும் காவலர்களுக்கு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களுக்கு காவல்துறையினர் மீது ஒரு மரியாதை ஏற்படும் அதன் அடிப்படையில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சில உயர் போலீஸ் அதிகாரிகள்.

Share:

ச. ஜெனித்

May 30, 2026

Leave a Comment