#student protests continue ; அரசியல் நாடகமாடும் தர்மேந்திர பிரதான், தொடரும் மாணவர்கள் போராட்டம்.

July 29, 2026

By இரா. தேவேந்திரன்.

#BIG story, #Jantar Mantar, #Neet banned news, #Dharmendra Pradhan news, #1997 Dharmendra Pradhan story, #jantar mantar, #student protest, #prime minister Modi

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக ஜெ.பி. பட் நாயக் பணியாற்றிய காலத்தில்  மூன்று முறை முதல்வராக ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல் இரண்டு பதவி காலங்கள் 1980 முதல் 1989 வரை மூன்றாவது பதவிக்காலம் 1995 முதல் 1999 வரை பின்னர் அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் ஜெ.பி பட் நாயக் பணியாற்றியுள்ளார்.

 தர்மேந்திர பிரதான் 1997 ல் எடுத்த பழைய படம்.

அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் 1997 ஆம் ஆண்டு ஒடிசாவில் கேள்வித்தாள் வினா வெளியான விவகாரத்தில் அப்போது ABVP  இயக்கத்தில் இருந்த தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலத்திற்கு எதிராகவும் ஜே பி பட் நாயக் அரசுக்கு எதிராகவும் பெரிய போராட்டம் நடத்தினார்.

அப்போது தான் வெளி உலகத்திற்கு தர்மேந்திர பிரதான் யார் என்பது தெரிய வந்தது.  எந்த கேள்வி தாள் வெளியான விவகாரத்திற்கு ரோட்டில் இறங்கி போராடினாரோ அதேபோன்ற நீட் வினாத்தாள் விவகாரத்தில் தனது பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டது .போராடிவரும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

ஆனால் மாணவர்கள் தற்போது போராடிவரும் காலகட்டத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மட்டுமல்லாமல் அவரை கைது செய்ய வேண்டும் என்பதுதான் மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதை போல காக்ரோச் ஜனதா பார்ட்டி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் அந்த இயக்கத்தை ஆதரித்து வருகிறார்கள்.  எனவே இந்தியாவிலும் அப்படிப்பட்ட ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று இளைஞர்களும் வருங்கால தலைமுறையினரும் எதிர்பார்க்கின்றனர்.

ஜேபி பட்நாயக் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

முன்பு 1997 இல் ஜேபி பட்நாயக் முதலமைச்சராக இருந்தபோது கேள்வித்தாள் லீக் ஆனதாக ஒரு மிகப்பெரிய போராட்டம் எழுந்தது. அந்தப் போராட்டத்தில் அப்போது ABVP தலைவராக இருந்தவர் தர்மேந்திர பிரதான். சுமார் 1500 மாணவர்களை திரட்டி முதல்வர் வீட்டை நோக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.  அப்போது போலீஸ் நடத்திய தடியடியில் அவருக்கு பலத்த காயம் அப்போது போலீஸ் நடத்திய தடியடியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கேள்வி தாள் லீக்கான போராட்டத்தில் அவரது துணிச்சலைக் கண்டு பிஜேபி அவரை தங்கள் கட்சியில் இணைத்து வளர்த்தது. அவர் அரசியலில் பெரிய ஆளாக வளர இந்தப் போராட்டம் உதவியது.அவர் யார் தெரியுமா ?

நீட் தேர்வு தாள் வெளியான விவகாரத்தில் யாரை ராஜினாமா செய்ய சொல்லி அரசியல் கட்சிகள், மக்கள், மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்களோ அதே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் அவர். காலம் எவ்வளவு விசித்திரமானது என்று இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின் குறிப்பு;
1997 போராட்டத்தில் தர்மேந்திர பிரதான் அடிபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணைப்பில் இருப்பது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

வெளிநாட்டில் படிக்கும் தர்மேந்திர பிரதானி மகளை இந்தியாவுக்கு திரும்ப அழைக்க வேண்டும்.

இந்தியாவில் தரமான கல்வி அளிக்கப்படுவதில்லை என்பதை தர்மேந்திர பிரதான் ஏற்றுக் கொள்கிறாரா என்று டெல்லி ஜந்தர் மந்திரில் போராடி வருகிற மாணவர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

July 29, 2026

Leave a Comment