#nedumaran son dies in australia ; ஆஸ்திரேலியாவில் பழ.நெடுமாறன் மகன் மரணம்.

October 3, 2026

By இரா. தேவேந்திரன்.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மகன் மாணிக்கம் உடல் நலக்குறைவால் ஆஸ்திரேலியாவில்  மரணமடைந்தார்.  பழ.நெடுமாறனுக்கு பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால்  இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறனின் இளைய மகனான மாணிக்கம் நெடுமாறன் (57), அக்டோபர் 1ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காலமானார்.மெல்பர்னில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த இவர், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவி, ஒரு புத்த துறவியாகத் தனது வாழ்வை அமைத்துக் கொண்டார்.
கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த தன் மகன் மாணிக்கம் அவர்களின் இறுதிச் சடங்கில் அவரது பெற்றோரான பழ.நெடுமாறனும் அவரது மனைவியும் பங்கேற்க முடியவில்லை.பழ.நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கும் காரணத்தால், அவர்களால் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய இயலவில்லை என்று அவர்களது குடும்ப வட்டாரங்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் விஜய் அரசில் உள்ள அனுபவமற்ற புதிய அமைச்சர்கள் முன்னுள்ள சவால்கள் என்ன? - BBC News தமிழ்
ஐயா நெடுமாறன் அவர்களின் மகன்  மாணிக்கம் புற்றுநோயால் மரணமடைந்தார். ஆனால் அவருக்கு இறுதி சடங்குகளை செய்ய முடியாத நிலையில் பழ.நெடுமாறன் தற்போது இருந்து வருகிறார் காரணம் அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.

உலக பேரமைப்பு தலைவர் நெடுமாறன் அவர்கள் தமிழக அரசியலில் மிக மூத்த அரசியல் தலைவர் அது தவிர காங்கிரஸ் பேரிய இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்.  மனித உரிமை நாளில் சீமான் விடுதலை: வைகோ | நாம் தமிழர் கட்சிஇந்த நிலையில் அவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசில் கூட்டணி வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகியோர் எந்தவித உதவிகளையும் செய்யாமல் மௌனம் காத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளா கியுள்ளது. தொல். திருமாவளவன் - தமிழ் விக்கிப்பீடியாமேலும் வைகோவும், திருமாவளவனும் சொன்னால் விஜய் அரசு உடனடியாக அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்ததிலிருந்து விலக்கு அளித்து அவரது மகனுக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்  என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். ஆனால் இவர்கள் மௌனம் காப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

October 3, 2026

Leave a Comment