திமுக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய சொத்தை போலி ஆவணங்களை கொண்டு அபகரித்து கொண்டதாக ஸ்ரீரங்கம் திமுக பகுதிச் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளராக இருப்பவர் ராம்குமார் இவரது மனைவி ஆண்டாள், திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலக்குழு தலைவராக உள்ளார். இவர் முன்பு முன்னாள் அமைச்சர் நேருவின் ஆதரவாளராக இருந்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எ.வ,வேலு ஆதரவாளராக மாறிப்போனார். இந்நிலையில், ராம்குமார் ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ள ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய கோயில் சொத்தை போலியாக ஆவணம் தயாரித்து அபகரித்து கொண்டதாக ஸ்ரீரங்கம் கோயில் ஆணையர் சிவராம்குமார், மாநகர குற்றப் பிரிவு போலீஸில் கடந்த செப்.10-ம் தேதி புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் ஸ்ரீரங்கம் காந்தி சாலையில், 7,515 சதுர அடி பரப்பளவு கொண்ட பங்களாவுடன் கூடிய இடத்தை ரூ.1.45 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இல்லாத உரிமையை இருப்பதாகக் கூறி கடந்த 2022 டிச.5-ம் தேதி ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ராம்குமார் பத்திரப் பதிவு செய்துள்ளார். முன்னதாக, இந்த இடத்தின் உரிமையாளர்களான சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் ரங்கராஜன் மனைவி பத்மஜா, பெங்களுருவில் வசிக்கும் கிருஷ்ணசாமி மனைவி விஜயா, இவர்களின் சகோதரர்கள் சென்னை கோடம்பாக்கம் அசோக் அவென்யூவை சேர்ந்த சவுந்தரராஜன், புதுச்சேரி லாஸ்பேட்டை குமரன் நகரை வெங்கடவரதன் ஆகியோர் மோசடியான ஆவணங்கள் மூலம் முறைகேடாக கிரைய ஆவணம் பதிவு செய்துள்ளனர். இதற்கு அப்போதைய ஸ்ரீரங்கம் சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார்.

எனவே, ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளராக கட்சி பொறுப்பில் இருந்துகொண்டு, அதனை தவறாக பயன்படுத்திய ராம்குமார் மீதும், திட்டமிட்டு கோயில் சொத்தை அபகரிக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் கூட்டுச் சதி செய்து மோசடியான ஆவணங்களை உருவாக்கிய மற்ற 4 பேரின் மீதும், மேற்படி சொத்து கோயிலுக்கு பாத்தியப்பட்டது என்பதால் எவ்வித பதிவும் மேற்கொள்ள வேண்டாம் என்று உரிய சட்டபூர்வமான அறிவிப்புகள் அனுப்பியிருந்ததை பெற்றுக் கொண்டும் மோசடிக்கு துணை போன சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் மாநகர குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவேல், 420 உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாம் இது சம்பந்தமாக மேலும் விசாரணை செய்தோம்.
ராம்குமார் தரப்பில் நாம் பேசினோம், அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம். 1940-ல் ரெங்கநாத ஐயங்கார் என்பவர் தான் மேற்படி சர்ச்சைக்குரிய நிலத்தை வாங்குகிறார், பின்னர் அவர் அந்த இடத்தில் ஒரு வீடு கட்டி குடும்பத்தோட வசித்து வருகிறார். அவருக்கு நான்கு பிள்ளைகள். முதல் மகன் வெங்கடவரதன் அவர் ஜட்ஜ் ஆக இருந்திருக்கிறார். இண்டாவது மகன் சௌந்தரராஜன் சிபிஐயில் சிவில் லாயர் என்று சொல்கிறார்கள். பத்மா ரங்கசாமி, விஜயா கிருஷ்ணசாமி என்று இரண்டு பெண்கள். இதில் ஒருவர் இஸ்ரோவில் சயின்டிஸ்ட்டாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக எல்லோருமே பெரிய குடும்பம் தான். மேற்கண்ட நான்கு பேரும் கல்யாணம் ஆனவுடன் அவரவர் ஊருக்கு சென்று விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாரம்பரியமான ஸ்ரீரங்கம் வீட்டை மட்டும் பூட்டி வைத்து அதற்கு ஒரு வாட்ச்மேன் போட்டு பார்த்து கொள்ள சொல்கிறார்கள். நாளடைவில் அந்த வாட்ச்மேன் ஓனர் மாதிரியே ஆக்ட் பண்ண ஆரம்பித்து விடுகிறான். வீட்டின் ஓனர்கள் வீட்டு பக்கமே வராததால் அந்த இடத்தை ரெண்டு, மூன்று பேருக்கு வாடகைக்கு விட ஆரம்பிக்கிறான் வாட்ச்மேன். அங்கே பிரச்சனையும் ஆகிறது.
பின்னர் இந்த விவகாரம் வீட்டின் ஓனர்களுக்கு தெரிய வர அவர்கள் வக்கீல் ஒருவர் மூலமாக எவிக்ஷன் போட்டு திமுக பகுதி செயலாளர் ராம்குமாரிடம் அந்த வீட்டை கொடுத்து விடுகிறார்கள். பின்னர் அந்த இடத்தை யார் வாங்குவது என்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. எல்லோரும் ரேட் கம்மியாக கேட்டதால் யாருக்கும் கொடுக்காமல் ராம்குமார் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் அவரிடமே அந்த இடத்தை கொடுக்க முடிவு பண்ணுகிறார்கள்.

முறைப்படி பத்திரவு பதிவு பண்ண வேண்டும் என்பதால் மூலப்பத்திரம் தேடுகையில் அது கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் பாண்டிச்சேரியில் தொலைந்து போனது மாதிரி ஜட்ஜ் வெங்கடவரதன் என்பவர் தான் போலீசில் புகாராக கொடுத்து, பின்னர் அவர்களிடம் இருந்து பெற்ற சர்டிபெகேட் அடிப்படையில் தான் ஸ்ரீரங்கம் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிந்து இருக்கிறார்கள். அதாவது முதலில் இரண்டு பெண்களும் தங்களுக்கு உண்டான பங்கை பத்திரம் செய்கிறார்கள். அடுத்ததாக வேங்கட வரதனும், சௌந்தரராஜனும் பத்திரம் செய்ய அதில் ஏதோ பிழை இருக்க, பின்னர் இரண்டாவதாக திருத்தல் பத்திரம் போட்டு பதிவு செய்கிறார்கள். இது எல்லாம் 2௦22 ம் ஆண்டு முடிந்து விடுகிறது. பத்திரம் பதிவு பண்ணுவதற்கு முன்பே லீகல் ஒபினியன் கேட்டு தான் ராம்குமார் பதிவு செய்ததாக சொல்கிறார்கள்.
அதன்பின்னர் தான் ராம்குமார் இடம் வாங்கிய விவகாரம் வெளியில் தெரியவர, ராம்குமாருக்கு ஏது இவ்வளவு பணம் இந்த சொத்து ஏற்கனவே பிரச்சனையில் இருக்கிறதே எப்படி வாங்கினார் என்று அவர் சார்ந்த திமுக கட்சிக்குள்ளே விவாதமாக மாறுகிறது. இந்த நிலையில் பத்திரம் முடிந்த மறு வருடமே 3/3/2023-ல் மேற்படி பத்திரம் பதிவு செய்த இடமான 1௦27 ல் வரும் இடம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு சொந்தம் என்று சொல்லி ஜட்ஜ்மென்ட் வருது. அந்த ஜட்ஜ்மென்ட்க்கு அப்புறம்தான் கோயிலில் இருந்து நோட்டீஸ்லாம் கொடுத்து, ஸ்ரீரங்கத்துல எந்த சொத்தையும் பத்திரம் பண்ணக்கூடாதுன்னு நோட்டீஸ் கொடுக்கிறாய்ங்க. அந்த பிரச்சனை தான் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த இடத்தில் ஏற்கனவே வாடகைக்கு இருந்த, அந்த இடத்தை வாங்க முயன்று, முடியாமல் போன, நிலையில் அவர்கள் துண்டுகோலின் பெயரில் பொது மனிதர்கள் சிலர் இந்த சொத்து சம்பந்தமாக பொதுநல வழக்கு தொடர்கிறார்கள். அது சம்பந்தமான வழக்கு மதுரை ஹைகோர்ட்டில் நடந்தும் வருகிறது.

அந்த வழக்கில் ராம்குமார் சப்-ரிஜிஸ்டார், தாசில்தார், HR & CE கமிஷனர் என்று பலர் மேல் போடுகிறார்கள். ( இதைத்தான் ராம்குமார் பேட்டியின் போது கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது என்று பேட்டி கொடுத்தார்) அதன்பின்னர் ஸ்ரீரங்கம் காவல் நிலையம், கலெக்டர் விசாரணை மற்றும் ஆர்டிஓ விசாரணை டிவிஏசி விசாரனை என்று அனைத்து விசாரணையும் நடந்து முடிந்துள்ளது அந்த விசாரணையில் அப்போது சப்-ரிஜிஸ்டராக இருந்த வனிதா, ராம்குமார் என்று எல்லோரையும் விசாரணை செய்துள்ளார்கள். இதில் சப் ரிஜிஸ்டர் வனிதா மீது சார்ஜ் வேறு போடுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பத்திரபதிவின் போது வனிதா எந்த லஞ்ச பணமும் வாங்கவில்லை என்பது தான். அடுத்து மேற்கண்ட வழக்கு சம்பந்தமாக தவறாது ராம்குமார் ஆஜர் ஆகி வந்த நிலையில் அந்த இடத்தை தற்சமயம் திமுக கட்சி அலுவலகமாக மாற்றி நடத்தி வந்தார். இந்த நிலையில் தான் இப்போது அமைச்சர் ரமேஷ் மூலமாக பிரச்சனை பூதகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில் ராம்குமார் தரப்பில் மேலும் சொல்வது என்னவென்றால் அந்த சொத்தை சட்டப்படி தான் நாங்கள் வாங்கினோம். நாங்கள் வாங்கும்போது கோயில் சொத்துப்பட்டியலில் வரவில்லை என்று, ஆனால் கோயில் தரப்பில் சொல்வது. அந்த இடம் 1027 டைட்டில் டீடில் வருவதால் அது ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு உண்டான சொத்து என்று. இந்த நிலையில் ராம்குமார் தரப்பினர் கேட்பது ஒன்றே ஒன்று தான். ஸ்ரீரங்கத்துல இருக்கிற நிறைய சொத்துக்கள் அதாவது, சித்திரை வீதி, உத்திரை வீதி என்று பல சொத்துக்கள் எல்லாமே 10 27 டைட்டில் டீடில் தான் வருகிறது. அவை எல்லாத்துக்கும் பத்திரம் இருக்கிறது.
பட்டாவும் இருக்கிறது அப்ப அவங்க எல்லோரும் போலி பத்திரம் போட்டாங்களா? என்பது தான். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அந்த சொத்தை விற்றவர்கள் அனைவருமே சாதாரன ஆட்கள் கிடையாது. அந்த சொத்தை விற்றவர்கள் அனைவருமே பெரிய குடும்பத்து ஆட்கள். ஒருத்தர் ஜட்ஜ் அவர் இப்போது இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஒருத்தர் லாயர். மற்ற இரண்டு பெண்களுமே நல்ல செல்வந்தர்கள் அவர்கள் எப்படி போலி பத்திரம் போடுவார்கள் என்பது தான்.
இந்த நிலையில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக கடந்த 1866 ஆம் ஆண்டு 329 ஏக்கர் நிலங்கள் ஆவணங்கள் உள்ளதாகவும். மேலும், 1910 மற்றும் 1930 ஆம் ஆண்டு பதிவேடுகளிலும் இவை கோயில் சொத்துக்களாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும.
/indian-express-tamil/media/media_files/2026/10/01/dmk-man-arrested-in-srirangam-temple-land-rss-50-crore-fraud-case-tamil-news-2026-10-01-23-01-36.jpg)
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக பகுதி செயலாளர் ராம்குமார், முறையான மூலப் பத்திரங்கள் ஏதுமின்றி, போலி ஆவணங்களைத் தயாரித்து கோயில் நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றி அங்கு கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும், முறைகேடு செய்யப்பட்டுள்ள இந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். என்றும் துறை அமைச்சராக இருந்த சேகர் பாபு மற்றும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் ஒரு சாதாரண பகுதி செயலாளரால் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட முடியாது என்று அமைச்சர் ரமேஷ் திடிரென்று பேட்டி கொடுத்த விவகாரம் தான் இப்போது பூதகரமாக வெடித்துள்ளது.
மேலும் அமைச்சர் ரமேஷ் பேட்டி அளிக்கும்போது தமிழக முதல்வர் விஜய் கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும், எனது தொகுதி மக்களின் நலனுக்காகவும் கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கவும் இந்த விவகாரத்தில் இறுதி வரை போராடுவேன் என்றார்.
மேலும் அமைச்சர் ரமேஷ் பேட்டி அளிக்கும்போது தமிழக முதல்வர் விஜய் கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும், எனது தொகுதி மக்களின் நலனுக்காகவும் கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கவும் இந்த விவகாரத்தில் இறுதி வரை போராடுவேன் என்றார்.யார் இந்த ராம்குமார்..
சாதாரன லாட்டரி வியாபாரி இன்று கோடிஸ்வரன் சாதரணமாக ஒரு நம்பர் லாட்டரி விற்றவர் தான் இந்த ராம்குமார். அப்படியே திமுகவில் ஐக்கியமாகி முன்னாள் அமைச்சர் நேருவுக்கு பயங்கர நெருக்கமாக இருந்து அவரை வைத்தே கட்சியில் படிப்படியாக வளர்ந்தார்.
இவரால் ஸ்ரீரங்கம் மக்களுக்கு நல்லது நடந்ததோ, இல்லியோ அவர் தன்னை வளர்த்து கொண்டார். தன்னை மட்டுமே வளர்த்து கொண்டார். அடுத்தடுத்து தன் வாயால் பல பிரச்சனைகளில் ராம்குமார் சிக்கி வந்தாலும் அப்போதைய அமைச்சர் நேரு என்ன காரணமோ இவரை மட்டும் கைவிடவில்லை. விளைவு ராம்குமார் மனைவி கவுன்சிலர் ஆகி கோட்ட தலைவர் ஆனார். மக்கள் பணியை செய்தார்களோ இல்லியோ, கட்சி தொண்டர்களை கவனித்தாரோ இல்லியோ, ஸ்ரீரங்கத்தில் நிறைய சொத்துக்களை வாங்கி குவித்தார். உதரணமாக கோவில் வசம் என்ற பெயரில் மேல அடைவிளஞ்சான் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் விடுதி கட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தேனியிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாராம்.பின்னர் கோவில் விசயத்திலேயே ராம்குமாருக்கும் அப்போதைய அமைச்சர் நேருவுக்கும் முட்டல் வர, ராம்குமாரை ஒதுக்கியே வைத்திருந்தார் இன்று வரை ஒதுக்கியே விட்டார் நேரு. நீ போனால் என்ன என்று அப்போதும் தெனாவட்டாக அப்போதைய அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் எ.வ வேலு ஆகியோர் தொடர்பை வைத்து கொண்டார் ராம்குமார். அதுவும் திருச்சிக்கு அமைச்ச்சர் சேகர்பாபு வந்தால் ஆள் இன் ஆல் ராம்குமார் தான். அப்புறம் என்ன சொல்லவா வேண்டும். ஒரு கட்டத்தில் ஸ்ரீரங்கம் கோயிலையை தன் கண்ட்ரோலில் வைத்து கொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினார்.
இதனால் அங்கிருக்கும் பட்டர்கள் முதல் கோயில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வரை ராம்குமார் மீது அரங்கா இந்த ராம்குமாரை ஒரு வழி பண்ண மாட்டியா என்று சாபம் இடாத குறை தான். லோக்கலிலும் அடாவடி தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் திமுகவுக்கு வாக்கு வங்கி குறைந்ததுக்கு காரணம் ராம்குமாரால் தான் என்று திமுகவினரே அடித்து சொல்வார்கள். ஆகவே ராம்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்பது தான் கடைசி கட்ட தகவல்.
இந்த செய்தி குறித்து முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக தலைவர் அல்லது திமுக தொடர்புடையவர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.