#students should ask questions Rahul’s speech; மாணவர்கள் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் ராகுல் பேச்சு.

October 10, 2026

By இரா. தேவேந்திரன்.

தமிழகத்தை தொட விட மாட்டோம். அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்,’ என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி சென்னை தீவித்திடலில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் 10,000திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பலந்து கொண்டனர்.

அவர் பேசியதாவது; தமிழக மக்கள் மீது ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, வரலாறு அனைத்தும் 2வது பட்சம் என்றும், ஹிந்தி மொழி தான் முதன்மையானது என்று அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர்.புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், தமிழகத்திற்கான ரூ.3,500 கோடியை விடுவிப்போம் என்று இருக்கின்றனர்.

நீட் தேர்வினால் 87 சதவீதம் தமிழ் மாணவர்களின் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு செல்கிறது. 70 சதவீத மாநில பல்கலைகளில் துணை வேந்தர் இல்லாமல் இருக்கிறது. காரணம் கவர்னர் தான். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் பல்கலைகளை நடத்த நினைக்கிறார்.

சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

தொகுதி மறுவரையறை மூலம் தமிழக குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள். தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. தமிழ் கலாசாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தை தொட விட மாட்டோம். அனைவரும் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது.

டில்லி நகரம் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை தாக்குகின்றனர். மாணவர்கள் போராட்டம் எதற்காக நடக்கிறது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. கடந்த 15 ஆண்டாக நாடகத்தை நடத்தி வருகிறார்கள். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் தாக்குவதற்கு ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் மோடி சீரழிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களின் குரல் என்ற பெயரில் நாடு முழுதும் மாணவர்களை சந்தித்து காங்கிரஸ் எம்பி ராகுல் கலந்துரையாடி வருகிறார். சென்னை தீவுத்திடலில் இன்று மாலை மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னைக்கு வந்தார்.அதன்பிறகு, நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு ராகுல் சென்றார். அங்கு கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அங்கிருந்து முதல்வர் விஜய்யும், காங்., எம்பி ராகுலும் ஒரே காரில் புறப்பட்டனர். பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான ஹோட்டலில் ராகுலுக்கு முதல்வர் விஜய் விருந்தளித்தார்.சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற மாணவர்களுடனான மாநாட்டில் வெளியிடப்பட்ட “மொகாம்போ மோடி இந்திய ஜனநாயகத்தை அழிக்கிறார்” (MOGAMBO MODI IS DESTROYING INDIA’s DEMOCRACY) என்ற நக்கல் கலந்த தலைப்பிலான காணொளி தற்போது இணையத்திலும் அரசியல் களத்திலும் பெரும் கிண்டலையும் பேசுபொருளையும் உருவாக்கியுள்ளது;‘மொகாம்போ’ போல ஒட்டுமொத்த தேசத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்துக்கொண்டு, மத்திய அரசின் சதிகளால் மக்களின் அடிப்படை உரிமைகளையும் மாநிலங்களின் சுயாட்சியையும் சில்லறையாகச் சிதைக்கும் வித்தைகளை அரங்கேற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் லீலைகளை அந்தக் காணொளி அப்படியே அச்சுப் பிசகாமல் கிண்டலடித்துக் காட்டியுள்ளது.

கூட்டத்தில் திரண்டிருந்த மாணவர்களின் ஆரவாரத்திற்குக் நடுவே வெளியான இந்த நெட்டிசன் கலாய்ப்புக் காணொளி, சமூக வலைதளங்களில் வைரலாகிச் சங்கிகளைக் கதிகலங்க வைத்துள்ளதுடன், பாஜகவின் அடாவடி அரசியலைத் திறம்பட வெளிச்சம் போட்டுக் காட்டியும் வருகிறது. என்று பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களை காங்கிரஸ் கட்சியினர் நீண்ட நேரம் தரையில் உட்கார வைத்து மாணவர்களை டென்ஷனாக்கிவிட்டார்கள் என்று மாணவர்கள் புலம்பி தள்ளி விட்டனர். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை மாணவர்களின் குரலுக்கு காங்கிரஸ் கட்சியினர் பதிப்பளிக்கவில்லை என்றே தெரிகிறது. கோஷ்டி அரசியலும் , சாதி அரசியலும் என்றைக்கு காங்கிரஸ் கட்சியில் களையெடுக்கப்படுகிறதோ அன்றைக்குத்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளரும் என்கிறார் கட்சியின் ஒரு மூத்த நிர்வாகி.

Share:

இரா. தேவேந்திரன்.

October 10, 2026

Leave a Comment