உலகம் முழுவதும் தைரியமாக லஞ்சம் வாங்குவதிலும், தைரியமாக லஞ்சம் கேட்பதிலும் பெண் அதிகாரிகளே முதலிடத்தில் இருக்கின்றனர். என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
குறிப்பாக இந்தியாவில் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆண் அதிகாரிகள் லஞ்சம் அதிகமாக வாங்குவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் குறிப்பாக அரசு அதிகாரிகள் அதாவது காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள், வணிகவரித்துறை, மின்சார வாரியத் துறை அதிகாரிகள் என அரசுத்துறை பெண் அதிகாரிகளே வெளிப்படையாக லஞ்சம் கேட்டு மிரட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.
Adminds லட்சுமி பிரியா.
அந்த வரிசையில் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடியை தாண்டுகிறது. அதேபோல ஆர்டிஓ, டிஆர்ஓ, சுரங்கத் துறை, மற்றும் சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளின் பல பேர் பல கோடிகளை சம்பாதித்துள்ளனர். குறிப்பாக 2026 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் புவியியல் சுரங்கத்துறை (ADMINDS) உதவி ஆணையராக இருந்த லட்சுமி பிரியா என்பவர் நீலாங்கரையில் பல கோடி ரூபாய் அளவிற்கு சொகுசு பங்களா கட்டி வருவதாக அவருக்கு லஞ்சம் கொடுத்த மணல் குவாரி உரிமையாளர்கள் வெளிப்படையாக சொல்லி வருகின்றனர். அது தவிர அவருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.
மகேஸ்வரி ஐஏஎஸ்.
அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மகேஸ்வரி கொரோனா காலத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக அதாவது அரசு பணத்தை திருடியதாக வட இந்தியர்களுக்கு உணவு பொருட்கள், ரயில் கட்டணம், துணிமணிகள் வாங்கித் தந்ததாக பொய் கணக்கு எழுதி சம்பாதித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த தாசில்தார் மணிகண்டன் தற்போது உயிருடன் இல்லை. அவர் பல கோடிகளை கொள்ளையடித்தவர் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக அவரது உறவினர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவின் கிரிக்கெட் அணியில் உள்ள ஒரு விளையாட்டு வீரருக்கு சொந்தமான இடத்தை பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் ஒருவருக்கு அவர் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது. அவருக்கு உறுதுணையாக இருந்த சங்கிலி ரதி என்கிற தாசில்தார் தற்போது திருவள்ளூர் ஆர்டிஓ வின் தனி அலுவலராக பணியாற்றி வருகிறார். தற்போது இந்த ஆண்டில் மட்டும் அவர் பல லட்சம் ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கியதாக அவரது அலுவலக ஊழியர்களே வெளிப்படையாக சொல்லி வருகின்றனர்.
இதைவிட பெரிய அதிர்ச்சி தரும் செய்தி இதே திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய பெண் அகத்தியர் என சொல்லப்படும் சுந்தரவல்லி ஐஏஎஸ் வெளிநாட்டுக்குச் சென்ற போது 70 லட்சம் ரூபாய்க்கு தனது ஏடிஎம் கார்டு மூலம் வைரம் வாங்கியுள்ளார். அது தவிர காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா என்ற பெண் அதிகாரி 100 கோடி ரூபாய்க்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் நில ஆக்கிரமிப்பில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது தற்போது வரை அவர் பணியில் சேர்க்கப்படாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காவல் உதவி ஆணையர் யாஸ்மின்.
ஜெம் வீரமணி வழக்கில் பல லட்சங்கள் கோடிகள் கைமாறியதாக சொல்லப்படும் விவகாரத்தில் யாஸ்மின் என்கிற காவல் உதவி ஆணையர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தவிர அவர் கோயம்பேட்டில் பணியாற்றிபோது தாஹிரா என்ற பெண் இன்ஸ்பெக்டரிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அடுக்கு மாடி வாங்கி முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே தாஹிரா இன்ஸ்பெக்டர் கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு சொந்தமான பண்ணை வீட்டின் நிர்வாகியாக பணியாற்றிய உளுந்தை ரமேஷிடம் கோயம்பேட்டில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவரிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர்களே வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்கள் காரணம் அவர்களுக்கு சரியான பங்கை இன்ஸ்பெக்டர் தாஹிரா தரவில்லை என்பது தான்.
இன்ஸ்பெக்டர் தாஹிரா.
இந்த விஷயத்தில் இன்ஸ்பெக்டர் தாஹிரா பல வட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் உளுந்தை ரமேஷின் சிறுமி பாலியல் பலாத்காரமும் ஜெம் வீரமணி வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆனி விஜயா என்கிற பெண் போலீஸ் அதிகாரி அதாவது ஐஜி ரேங்கில் உள்ள இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது முதல் டிஎஸ்பி பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை டீ, சாப்பாடு என எல்லாவற்றையுமே ஓசியில் தான் வாங்குவாராம் அவரது சொத்து மதிப்பு தற்போது பல சிசிகளை தாண்டும் என்கிறார்கள்.
ஐஜி ஆனி விஜயா.
இதே போல வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் என்று சொல்லப்படும் ஆர்டிஓ துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் பலருக்கு பல கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை இந்த அரசு தனி விசாரணை கமிட்டி வைத்து விசாரித்தால் 10 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் நிர்வாகத்தை நடத்தலாம் என்கிறார்கள். அந்த துறையில் உள்ள சில ஓரளவு நேர்மையான அதிகாரிகள் அதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்ளுகிற அதிகாரிகள்.
இந்தத் துறையில் எழுதப் படிக்கத் தெரியாத பல பிராடுகள் தங்களை மூத்த பத்திரிகையாளர்கள் என்று பல அரசுதுறை அதிகாரிகளை மிரட்டி லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய கோடிக்கணக்கில் சொத்து சேர்த்திருக்கிறார்கள். தற்போது வரை மாதம் மாதம் கூகுள் ஃபேவில் லஞ்சப்பணத்தை பெற்று வருகின்றனர். சில பத்திரிகையாளர்கள் அதாவது ஒவ்வொரு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு பீட்டு ஒதுக்குவார்கள், பீட்டு என்றால் ஒரு துறை ரீதியான செய்தியை ஒருவர் வழங்க வேண்டும் அதற்கு பீட் என்று பொருள். 

அப்படி பீட்டு பார்க்கும் பத்திரிகையாளர்கள் அந்தந்த துறை அதிகாரிகளை குறிப்பாக போலீஸ், போக்குவரத்து, அஞ்சல் துறை, ரயில்வே வருவாய், பத்திரபதிவுத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை என தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் செய்தி சேகரிக்க ஒவ்வொரு அலுவலகத்தில் ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஆயுத பூஜை முதல் டிசம்பர் 31 வரை எல்லா விழா காலங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கௌரவ பிச்சை எடுத்து வருவார்கள்.
அந்த அடிப்படையில் சொத்து சேர்த்த பத்திரிகையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி சொத்து சேர்த்து வைத்ததில் முதலிடம் வகிப்பவர்கள் ஆங்கில பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர்கள் அடுத்தது தினமலர், தினத்தந்தி, தினகரன் 3 பத்திரிகையில் பணியாற்றும் நபர்களே முன்னிலை வகிப்பார்கள். அவர்களெல்லாம் அரசு வழங்கும் எல்லாவிதமான உதவிகளையும் அரசு வழங்கும் இலவச வீட்டு மனைகளையும், வீடுகளையும் பெற்று வசதியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.
இப்படி பல அரசுத்துறைகளில் பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதாவது கன்னித்தீவு கதையாக முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. விரைவில் இவர்கள் சிக்குவார்கள் இவர்கள் பல கோடியில் லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் தங்களது மகன்கள், மகள்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் வாங்கி வைத்துள்ளனர். லஞ்சப்பணத்தை வாரிசுகள் மற்றும் உறவினர்கள் கடலில் கரைத்த பெருங்காயமாக விரயம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது கௌசல்யா மற்றும் சில பெண் இன்ஸ்பெக்டர்கள் உதவியாளர்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியில் தொடர்புடைய பெண் அதிகாரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். தமிழக அரசு லஞ்சத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒரளவாவது தடுக்கமுடியும். தன்னுடைய வேலைகள் வேகமாக முடியவேண்டும் என்பதற்காக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர விரும்புவதால் தான் லஞ்சம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட அதிகாரிகள் பயப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் லஞ்ச ஒழிப்பு துறை தான் பல லட்சக்கணக்காண ஊழல் அதாவது லஞ்சம் வாங்கி வழக்குகள் நிலுவையில் உள்ளன, மேலும் சரியான ஆதாரங்களை லஞ்சொழிப்பு த்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்பிக்காததால் பல வழக்குகள் தோற்றுப்போகின்றன. லஞ்ச ஒழிப்புத்துரையிலும் பல கருப்பு ஆடுகள் இருப்பதால் அங்கு நேர்மையான அதிகாரிகள் இருப்பது இல்லை என்று பொது மக்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.