#5 crore bribery complaint; ரூ. 5 கோடி லஞ்சப் புகார் இன்ஸ்பெக்டரிடம் ஒரு நாள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

October 23, 2026

By இந்திரசேனா L

5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவரிடம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தனர். இந்த நிலையில் நீதிபதி ஒரு நாள் மட்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில் பங்குதாரர்களிடையே உரிமைப் பிரச்சினை நிலவி வந்தது.

இது தொடர்பாக இருதரப்பினரும் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்திலும் மத்திய மண்டல போலீசை பாலகிருஷ்ணன் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தனர் இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் நிர்வாகத் தலைவர் ஆர் எம் பாஸ்கரன் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த பிரச்சனையில் உள்நோக்கத்துடன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தங்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் போலீசார் செயல்பட்டு வருவதாகவும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக போலீஸ் டிஜிபி இடம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சரவணன் புகார் அளித்திருந்தார்.

இவர்தான் ஐந்து கோடி லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் யாருக்கு மாற்றப்பட்டது பின்னர் நிர்வாக இயக்குனர் சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது பங்குதாரர்கள் இதையே காண பிரச்சனையில் போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் மேலும் ரூபாய் ஐந்து கோடி லஞ்சம் பெற்றதாகவும் சரவணன் கூறினார் இதைத்தொடர்ந்து தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வீட்டில் கடந்த ஒன்பதாம் தேதி சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி சுகுமாரனை சுகுமாரனை கைது செய்தனர்.

ஐ ஜி பாலகிருஷ்ணன்.

அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலிப்புதாக கூறியதால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் இந்த நிலையில் மருத்துவமனைக்கு கடந்த பத்தாம் தேதி சென்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரித்து இன்ஸ்பெக்டர் சுகுமாரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரனை பணிநீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார்.

Officials taking bribes; லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தங்களை திருத்தி கொள்ள  வேண்டும். - Chennai Reporters

இதைத்தொடர்ந்து சிபிசிஐடி வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சுகுமாரன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை கடந்த 16ஆம் தேதி நீதிபதி ஆக்சினஸ் ஜெப கிருபா தள்ளுபடி செய்தார் இதைத்தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த சுகுமாரன் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே!

நேற்று திருவையாறு நீதிமன்றத்தில் சுகுமாரனை போலீசார் ஆஜர் படுத்தினர் அப்போது சுகுமாரனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்தனர் ஆனால் ஒரு நாள் மட்டுமே சுகுமாரனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Share:

இந்திரசேனா L

October 23, 2026