அனிருத், காவியா மாறன் திருமணம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
![]()
இதற்கிடையில், அனிருத் – காவியா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும், இதற்காக நான்கு தனி வானூர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், அனிருத்துடன் கல்லூரியில் பயின்ற நண்பரும் நடிகருமான பிஜார்ன் சுர்ராவ், இந்தத் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறவில்லை என்றும், சென்னையிலேயே நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.