#Brindavan Express train; பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலும், சந்தக்கடையும்.

October 25, 2026

By தே. ராதிகா

சென்னை அயனாவரம் பகுதியில் 5 லைட்டு சந்தை கடை என்ற ஒரு பகுதி உள்ளது.

சென்னைவாசிகளில்இது எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறி.

40 அடி சாலையில் இரண்டு பக்கமும் சந்தை கடை வைத்திருப்பார்கள் காய்கறி இரும்பு சாமான்கள் என எல்லா பொருட்களும் கிடைக்கும்.

12639/Brindavan SF Express - MGR Chennai to Bangalore SR/Southern Zone -  Railway Enquiry

அதேபோல பல்லாவரத்திலும் ஒரு பெரிய சந்தை நடக்கும்.

ஆனால் 18 பெட்டிகள் கொண்ட பிருந்தாவன் விரைவு ரயிலில் 18 பெட்டிகளுமே சந்தை கடை தான்.

அக்டோபர் 13ஆம் தேதி அன்று அரக்கோணத்தில் இருந்து ஒரு அவசர வேலை காரணமாக பிருந்தாவன் விரைவு ரயில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தேன்.

அரக்கோணத்தில் தொடங்கிய சந்தை கடை வியாபாரிகள் கத்திரிக்காய் முதல் கொண்டு கட்சி வரை கைக்குட்டை வரை எல்லா பொருட்களுமே கிடைக்கிறது நிம்மதியாக குளிர்சாதன பெட்டியில் தூங்கக்கூட முடியாத சூழல்.

 

லோக்கல் சந்தை கடை வியாபாரிகளை தவிர ஐ ஆர் டி சி இல் இயங்கும் விற்பனையாளர்கள் ஒரு பக்கம் அந்த விற்பனையாளர்கள் அனைவருமே இந்தி காரர்கள் பொறுமையாக சத்தம் குறைவாக கூட பொருட்களை சொல்லி விற்பதில்லை அதட்டலான காதுகளை கிழிக்கும் வண்ணம் பெரிய சவுண்டாக சொல்லி தான் ஒரு பொருளை விற்ப்பார்கள்.

கழிவறைகள் கூட சுத்தம் இல்லாத நிலை என்றால் இந்த விற்பனையாளர்களும் அதே கழிவறையை தான் பயன்படுத்துகிறார்கள்.

Vegetable Sellers on the Train — Aditi Kulkarni
இதுதான் இந்த நிலைமை என்றால் திருநங்கைகள் கூட்டாக ஆறு முதல் 10 பேர் வரை இனக் குழுக்களைப் போல வரிசையாக அன்புடனும் இறக்கத்துடனும் அவர்கள் காசு கேட்பதில்லை அதட்டலான குரலில் ரேணிகுண்டா படத்தில் வரும் பெண் உள்ளங்களைப் போல வில்லிகளைப் போல அதட்டலான சத்தத்துடன் முறைடன் பணம் கேட்டு மிரட்டும் துணியை பார்த்தால் குழந்தைகள் எல்லாம் உச்சா போய்விடுவார்கள் அந்த நிலைமையில் அவர்கள் செயல்பாடு உள்ளது அவர்களும் இந்த குளிர்சாதனப் பெட்டியில் வரிசையாக அனைவரையும் பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டே போகிறார்கள்.

இதை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பணியில் இருந்தும் எதுவும் கேட்பதில்லை பயணச்சீட்டு பரிசோதகர் வாய்மூடி மௌனமாகவே இருக்கிறார்

Share:

தே. ராதிகா

October 25, 2026