மனைவியை தற்கொலைக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன் கைது.

September 24, 2021

By தே. ராதிகா

சந்தேகம் காரணமாக, மனைவியை தற்கொலைக்குத் தூண்டி, அவர் தூக்கில் தொங்குவதை வீடியோவாக எடுத்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொண்டம்மா (30) என்பவருக்கும் 13 வருடங் களுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஏ.டி.எம்-மில் காவலாளியாக பணியாற்றும் பெஞ்சலய்யாவுக்கு, தன் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கணவருக்கு தன் மனைவி மீது சந்தேகம் வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்களாம். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சண்டையில், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கொண்டம்மா கூறியுள்ளார் .

செத்துத் தொலை என்று அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளார் அவரது கணவர்.உடனடியாக ஃபேனில் துணியை கட்டி தொங்கத் தொடங்கினார் கொண்டம்மா.

கணவர் தடுப்பார் என்று எதிர்பார்த்தார்.ஆனால் ‘நீ’ தற்கொலை செய்தால் தடுக்க மாட்டேன்.அதை வீடியோ எடுத்து உன் வீட்டுக்கு அனுப்புவேன்’ என்று கூறியுள்ளார்.

அடுத்த சில நொடிகளிலேயே தூக்கில் தொங்கி, துடி துடித்து உயிரிழந்தார் கொண்டம்மா. அதை வீடியோ எடுத்த பெஞ்சலய்யா, அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் பெஞ்சலய்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி தற் கொலை செய்வதை கணவனே வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share:

தே. ராதிகா

September 24, 2021

Leave a Comment