தரமற்ற அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிய நிறுவனத்தின் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

October 9, 2021

By இரா. தேவேந்திரன்.

தரமற்ற புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடங்களை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி பல நாட்கள் கடந்த நிலையில் இது வரை Contractor மற்றும் துறை அதிகாரிகள் மீது ஒரு FIR கூட பதியப்படவில்லை. ஏன்?

IIT ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகும் இது வரை அந்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. ஏன்?

மிகவும் மோசமான கட்டுமானம் என்பதை நேரடியாக கண்ட பிறகும் இது வரை அந்த கட்டுமானம் தொடர்பாக ஒரு அதிகாரி கூட சஸ்பென்ட் செய்யப்படவில்லை. என்பதற்கான காரணம் என்ன ?

PST Empire நிறுவனத்தை எப்பொழுது Blacklist செய்ய போகிறீர்கள் அமைச்சர் அன்பரசன் அவர்களே ? உங்கள் அமைதி எங்களுக்கு சந்தேகத்தை தான் அளிக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

October 9, 2021

Leave a Comment