நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது.

October 25, 2021

By குணசேகரன் வே

திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது.லதா மங்கேஷ்கர், சத்யஜித்ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினி
காந்த்துக்கு அறிவிக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது.இன்று (அக்டோபர் 25) டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இன்று காலை முதலே, சமூக வலைத்தளத்தில் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விழாவில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது, விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது, ‘ஒத்த செருப்பு’ படத்துக்காக பார்த்திபனுக்கு சிறந்த நடுவர் தேர்வு விருது.

கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ’விஸ்வாசம்’ படத்துக்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட்டது.

Share:

குணசேகரன் வே

October 25, 2021

Leave a Comment