அழகு நிலையங்களில் விபச்சாரம் நடவடிக்கை எடுப்பாரா டி.ஜி.பி.

November 18, 2021

By இரா. தேவேந்திரன்.

சென்னை உள்பட தமிழகமெங்கும் ஸ்பா சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

சென்னை மதுரை கோவை நெல்லை திருச்சி போன்ற மாநகரங்களில் இந்த மசாஜ் சென்டர்கள் அதிக அளவில் இயங்கி வருகிறது குறிப்பாக கோவை சென்னையில் அதிகமாக இயங்கி வருகிறது.

சென்னையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியப் பெண்களை வைத்து மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன நாளொன்றுக்கு ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வரை இந்த மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி சம்பாதிக்கின்றனர்.

அது தவிர டாப்பாக இருக்கும் பெண்களை இரவு நேர பணியின் போது அந்த பக்கம் போய் வந்து விடுவார்களாம்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லோக்கல் போலீசார் குறிப்பாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு மாதம் 25 லட்சம் வரை மாமூல் கிடைக்கிறதே என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆக இருக்கும் சாம் வின்சென்ட் என்பவரும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கும் சரவணன் என்பவருக்கும் மூன்று வருடங்களாக வருடங்களுக்கு முன்னதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர்.

அப்போது அளவுக்கு அதிகமாக மாமுல் வாங்கி சொத்து சேர்த்ததாக இருவர்கள் இவர்கள் இருவர் மீதும் பல்வேறு தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதில் பல முக்கிய ஆவணங்களும் தங்க நகைகள் வங்கி வைப்பு நிதி பத்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் இதுபோன்று ஒரு அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்று மாதர் சங்க அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், செங்குன்றம், பெரம்பூர், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் அழகு நிலையங்கள் என்கிற பெயரில் கல்லூரி மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளை குறிவைத்து விபச்சார கும்பல்.

அவர்கள் மூளைகளை சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது எனவே போலீசார் அழகு நிலையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெண் சமூக ஆர்வலர்கள்

Share:

இரா. தேவேந்திரன்.

November 18, 2021

Leave a Comment