பிரேசில் படகு விபத்து பத்து பேர் மரணம்.

January 10, 2022

By லீமா ஷாலினி கோரிய

தென்னமெரிக்க நாடானபிரேசசில் கேப்பி டோலியோ என்ற பகுதியில் ராட்சத மலைகளுக்கு நடுவில் ஃபர்னாஸ் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் இன்று பொது மக்கள் சிலர் படகில் சுற்றுலா சென்றனர்.

மதியம் சுமார் நான்கு மணியளவில் ஏரியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது 100 அடி உயரம் கொண்ட ராட்சத பாறை ஒன்று பயணிகள் சென்ற படகின் மீது விழுந்தது.

ஏரியில் படகு சவாரி செய்தவர்கள் மீது பாறை விழும் காட்சி.

அதில் பத்துக்கும் மேற்பட்டோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.அருகில் இருந்தவர்கள் இந்த காட்சியை படம் பிடித்துள்ளனர்.இதுதொடர்பாக பிரேசில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது யாரும் அந்த சுற்றுலா பகுதிக்கு படகு சவாரி செய்யக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share:

லீமா ஷாலினி கோரிய

January 10, 2022

Leave a Comment