பத்திரிகையாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த மூத்த பத்திரிகையாளர் அய்யா துரைராஜ் மரணம்.

January 16, 2022

By குணசேகரன் வே

மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் அவர்கள் உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார்.எம்.யூ.ஜே. மற்றும் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி.

கடந்த 41 ஆண்டுகள் சமுக அக்கறைக் கொண்ட பத்திரிகையாளராக பெரும் பங்களிப்பைத் தந்தவர் மூத்த பத்திரிகையாளர் தோழர் எஸ்.துரைராஜ்.1974 ல் ஜனசக்தி, நியூ ஏஜ், பிரண்ட் லைன், போன்ற ஆங்கில இதழ்களில் நிருபராக பணிபுரிந்தவர்.

பி.டி.ஐ. மற்றும் சி.என்.எஸ் செய்தி நிறுவனங்களிலும் பணியாற்றியவர்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு காலத்தில் முழுவதும் ஆங்கில நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் அமைப்பாகவே இருந்ததை.

மாற்றிதமிழ் நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள்பல நூறு பேரை அமைப்புக்குள் கொண்டு வந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை பலப்படுத்தியவர்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராகவும், சென்னை நிருபர்கள் சங்கத்தின், செயலாளராகவும் இருந்தவர்.சென்னை , புதுச்சேரி , தூத்துக்குடி , கடலூர் ,விழுப்புரம்,மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பணியாற்றிய தோழர் எஸ்.துரைராஜ் மிக அற்புதமான மனிதர்.

மனிதர்களிடம் எவ்வித பாகுபாடும் இல்லாமல் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் பழகியவர்.பத்திரிகையாளர்களின் குரல் நசுக்கப்படும் காலங்களில் அடக்குமுறைக்கு எதிராக ஓங்கி ஒலித்தவர்.

பத்திரிகையாளர் நலன்களுக்கு தொடர்ந்து பாடுபட்டவர்.மிக எளிமையான மனிதராக திகழ்ந்த தோழர்.எஸ்.துரைராஜ் அவர்கள், திருச்சியில் 10-08-1951 அன்று பிறந்தவர் .

பத்திரிகையாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்று கடந்த ஏழு ஆண்டுகாலகதனது சொந்த ஊரான அதே திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜனவரி-15. இயற்கை எய்தினார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் MUJ சார்பிலும் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

தோழர் எஸ்.துரைராஜ் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நாளை (16-01-2022) ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி , பிஷப் கல்லூரி அருகில் உள்ள எண். 786, 16 வது குறுக்குத் தெரு , வாசன் காலனி, வயலூர் சாலை திருச்சி என்ற முகவரியில் நடை பெறும்

Share:

குணசேகரன் வே

January 16, 2022

Leave a Comment