ஆவடி ஆர்.ஆர்.குழுமத்தின் தலைவர் இல்ல திருமண விழா.

February 9, 2022

By இரா. தேவேந்திரன்.

ஆவடியில் உள்ள ஆர்.ஆர் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனரும் தொழிலதிபருமான டி.எஸ்.சதிஷ்பாபு, ஜெயந்தி சதீஷ் அவர்களின் மூத்த புதல்வி ஷைலா ரேச்சல் மற்றும் சுஜின்டெல்லுஸ் அவர்களின் திருமணம்.

கோபாலபுரத்தில் உள்ள புனித ஜார்ஜ் கத்தீட்ரல் சி.எஸ்.ஐ ஆலயத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.பின்னர் திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலசில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

ரஷ்யாவில் இருந்து வந்த இசைக்கலைஞர்கள் வயலின் சாக்ஸபோன் ஆகியவற்றை வாசித்து வாழ்த்த வந்தவர்களின் நெஞ்சை மகிழ்வித்தனர்.

மணமக்களை வாழ்த்துவதற்கு ரஷ்யாவிலிருந்து அழைத்துவரப்பட்ட வெளிநாட்டு பேரழகிகள் மணமக்களுக்கு ரோஜா மலர் தூவி மணமேடைக்கு அழைத்து வந்தனர்.

இந்த விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் டாக்டர் திருமாவளவன் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாழ்த்துரை வழங்கினார்.பால்வளத்துறை அமைச்சர் நாசர் வைகோவின் மகன் துரை வையாபுரி.

முன்னாள் அமைச்சர்கள் பாண்டியராஜன் அப்துல் ரஹீம் மற்றும் பல ரியல் எஸ்டேட் அதிபர்கள் சினிமா நட்சத்திரங்கள் கிருத்துவ ஆலயத்தின் பாதிரியார்கள் என பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினர்.

இந்த விருந்து உபசரிப்பில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு ஆர்.ஆர். குழுமத்தின் சார்பில் சிறப்பான அன்பளிப்பு வழங்கப்பட்டது.

இதை நேரில் வந்து வாழ்த்திய அனைவருக்கும் நண்பர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் தொழில் அதிபர் சதீஷ் பாபு அவர்கள் நன்றி தெரிவித்து அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாக சிறப்பான ஏற்பாடுகளை ஆர்.ஆர் குழுமத்தின் ஊழியர்கள் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர் அந்திரிதாஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

February 9, 2022

Leave a Comment