நாகர்கோவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ வின் பேரன் அட்டகாசம்.

March 15, 2022

By குணசேகரன் வே

இந்த சிறுவனின் நம்பர் பிளேட்டை பாருங்கள் Grandson of Nagercoil MLA Shri MR Gandhi ன்னு எழுதியிருக்கு!

ஒரு சமானியன் வண்டியில் நம்பர் பிளேட் இல்லையென்றால் சட்டம் தன் கடமையை வேகமாக அதிகார திமிருடன் செய்திருக்கும்.ஆனால் பாஜக எம்.எல்.ஏ. வின் பேரன் என்பதால் சட்டம் அமைதி காக்கிறது.

இது தான் நாகர்கோயில் மாநகர போக்குவரத்து காவல்துறையின் மக்கள் பணி செய்யும் லட்சணம். பாத்தாண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட, தற்போது ஆளும் திமுகவை சேர்ந்த எத்தனையோ எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் மகன்கள் பேரன்கள் கூட இது போன்றதொரு ஆதிக்கபோக்கை காட்டியதில்லை.

குமரியில் வெறும் ஒரு எம்.எல்.ஏ சீட் ஜெயித்தவுடன் இவ்வளவு அதிகாரம் காட்டும் பாஜக கும்பல், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இவர்களது ஆட்டம் எப்படியிருக்கும் என்று எண்ணி கூட பார்க்க முடியவில்லை.

நாகர்கோயில் மாநகர போக்குவரத்து காவல்துறையிடம் இவ்வளவு அதிகார போக்கு காட்டும் இது போன்ற பொடிப்பயலகள் சமானிய மக்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை!

M.R. காந்தி அவர்களே, செருப்பு போடுவதால் உயிரற்ற “பூமித்தாய்க்கு” வலிக்கும் என்று செருப்பு போடாமல் நடப்பதாய் சொல்லும் நீங்கள், உங்கள் பேரனின் இது போன்ற அதிகார ஆதிக்க போக்கு ஜனநாயகத்திற்கு முரணான ஒன்று என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

உயிரற்ற பூமியை செருப்பால மிதிக்க தயங்குவதாய் கூறும் நீங்கள், உங்கள் பேரன் ஜனநாயகத்தை முடியென கூட மதிக்காமல் மிதிக்கிறாரே, அந்த சிறுவனுக்கு புத்திமதி சொல்லி புரியவைப்பீர்களா?

அதிமுக கூட்டணியில் குமரியில் ஒரு எம்.எல்.ஏ. சீட்டு ஜெயித்தவுடன் உங்கள் சிஷ்ய கும்பல் தமிழ்நாட்டைஉ.பி. என்று நினைத்திவிட்டார்களா?

Share:

குணசேகரன் வே

March 15, 2022

Leave a Comment