தமிழகத்தில் தொடரும் என்.ஐ.ஏ சோதனை.அடுத்து சிக்கப்போவது யார்?

October 9, 2022

By ஆனந்த குமார்

தமிழகத்தில் என் ஐ ஏ போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திடீரென்று சிவகங்கை, சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை:

சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதுடன் இலங்கையில் பயிற்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வீட்டில் இன்று அதிகாலை வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டனர்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது உள்ளூர் காவல் துறையினரும் உடனிருந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவார பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த விவகாரத்தில் கடந்த ஆண்டு சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி, ஆகியோர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். இந்த வழக்கை கடந்த 4 மாதங்களாக என்ஐஏ தங்கள் வசம் எடுத்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் செட்டுசாவடி என்ற இடத்தில் இளைஞர்கள் தங்கிய இடத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது சேலம் பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்! என்ஐஏ சோதனை

சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் சஞ்சய் பிரகாஷ், நவீன் ஆகியோர் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சேலம் செட்டிசாவடி பகுதியில் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share:

ஆனந்த குமார்

October 9, 2022

Leave a Comment