சேலத்தில் போலீசார் தாக்கியதில் முருகேசன் என்ற வியாபாரி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க எம்.பி கனிமொழி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் தாக்கியதில் சேலத்தில் முருகேசன் என்ற வியாபாரி இன்று பலியானார்
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள .
இன்னொரு கோர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலத்தில் நேற்று போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது மோட்டார் ஓட்டி வந்தவரை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது முருகேசனுக்கும் போலீருக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்றது அந்த வாக்குவாதத்தில் போலீசார் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர் நடு ரோட்டில் போலீசார் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் இன்று காலை பலியானார் போலீஸ் தாக்கிய வியாபாரி ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் சாமானிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்து விடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் காரணமாக போலீஸ் எல்லோரும் பணிவுடன் நடக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
மக்களிடம் வன்முறையைப் பிரயோகிக்க கூடாது. வண்டியை பித்தால் வழக்கு போட்டுவிட்டு உடனடியாக அனுப்பி விடவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் அதையும் மீறி போலீஸ் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது வியாபாரி முருகேசன் பலியாகியுள்ளார் சேலத்தில் முருகேசனை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உடனடியாக கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஅவரை பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டிருக்கிறது மனிதாபிமானம் இல்லாமல் காட்டு மிரண்டிகள் போல செயல்படும் போலீசாரை பணப்பயன் எதுவும் தராமல் விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்பினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும்.
சேலத்தில் காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த வழக்கில் விளக்கமளிக்குமாறு சேலம் சரக டிஐஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்