மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர் நீதிதேவன் அதற்கு முன்னதாக சக நண்பர்களுடன்ஓடும் ரயிலில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் கிராமம் அடைக்கலம் என்பவரது மகன் நீதிதேவன் இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்து மாநிலக் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நீதிதேவன் கடந்த 25ம் தேதியன்று கல்லூரி முடித்து சென்னையில் இருந்து ரயில் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது.
வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயிலின் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது திடீரென வழுக்கி தண்டவாளத்தில் விழுந்து படுகாய
மடைந்தார்பின்னர் சக மாணவர்கள் நீதிதேவனை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு நீதிதேவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்நிலையில் நீதிதேவன் ரயிலில் அடிபட்டு உயிர் இறப்பதற்கு முன் தனது சக நண்பர்களுடன் ரயிலில் சாகச பயணம் மேற்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் நீதிதேவன் மற்றும் அவரது நண்பர்கள் ரயிலின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டு ஆபத்தான ஜாலியாக சாகச பயணம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுபோன்ற சாகச பயணங்களை தடுக்க மாணவர்கள் மீது ரயில்வே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை.