சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியானவை என்றும் ஃபோட்டோவை ‘எடிட்’ செஞ்சு கொடுத்த டைரக்டர் சங்ககிரி ராஜ்குமார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்னுடன் உட்கார்ந்து ஆமை கறி சாப்பிட்டார் துப்பாக்கிகளை சுட்டு காண்பித்தார் நான் பயிற்சி எடுத்தேன் எங்கள் அண்ணி மதிவதனி இட்லியில் கறியை வைத்து கொடுத்தார் என்றெல்லாம் கதை விட்டு தமிழக மக்களை ஏமாற்றி இளைஞர்களின் மூளையை சலவை செய்து பல குடும்பங்கள் தாலியறுத்து தமிழர்களின் தியாகத்தை தனது பேச்சின் மூலம் வியாபாரம் ஆக்கி கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி என்கிற நாசமா போன கட்சியின் தலைவர் சீமானின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார் டைரக்டர் ராஜ்குமார்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தான் எங்களின் ரத்த சொந்தங்கள் அவர்களால் தான் எங்களின் தியாகத்தில் பங்கெடுக்கும் உறவுகள் அவருகளால் தான் எங்கள் விடுதலை சாத்தியமாகும் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க தமிழ்நாட்டிலிருந்து பலர் இலங்கைக்கு சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
தன்னலம் பார்க்காமல் உடைமைகளை இயக்கத்திற்காக செலவழித்த உலகத் தமிழர்களின் தலைவர் நெடுமாறன், வைகோ, திருமாவளவன், பாவாணன், வன்னியரசு, ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி என ஒரு பட்டியலே நீண்டு கொண்டு போகிறது. இந்த நிலையில் சினிமாவில் சோடம் போன அழகிய பெண்களின் வாழ்க்கையை சீரழித்து தனது பேச்சின் மூலம் தமிழக அரசியலை பாழ்படுத்தி தலைவர் பிரபாகரனுடன் ஒன்றாக இருப்பதைப் போல ஒரு புகைப்படத்தை தயார் செய்து தமிழர்களையும் உலக தமிழர்களை ஏமாற்றி வந்த திருடர் சீமானின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார் போட்டோவை தயார் செய்து கொடுத்த டைரக்டர் ராஜ்குமார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை ‘எடிட்’ செய்து கொடுத்ததே நான் தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். கிராமப்புற கதைக்களத்துடன் உருவான இந்த இரண்டு படங்களும், கலை ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை. இந்நிலையில், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சன் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்ததாக கூறியுள்ளார். சீமான் – பிரபாகரன் புகைப்படம் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழன் தொலைக்காட்சியில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன்.
அப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருந்து வந்தார். நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன். அப்படி பல முறை பல படங்களை எடிட் செய்து கொடுத்திருக்கிறேன். அப்படி ஒரு முறை டிவிடிக்களை கொண்டு வந்து கொடுத்து, சீமான், பிரபாகரன் இருவரும் அருகருகே இருப்பது போல படம் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.
நான் எதற்கு என்று கேட்டதற்கு, “நாங்கள் அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பரிசு கொடுப்பதற்காக இந்த புகைப்படம் வேண்டும்” என்று சொன்னார். என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அருகருகே இருப்பதுபோல தயார் செய்து கொடுத்தேன். எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பிற்காலத்தில் சீமான், பிரபாகரனை சந்தித்ததாக வெவ்வேறு பல புதிய தகவல்களுடன் உலா வந்தபோது செங்கோட்டையனை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டேன். நம் புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவர் உருவாகிவிட்டார் என சந்தோஷமாக கூறினார்.
ஆனால், அதே காலகட்டத்தில் இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்ற தகவலும் பரவியது. ஆனால், இதுவரை நான் யாரிடமும் இதைப்பற்றி சொன்னதில்லை.

அது தவிர பிரபாகரனுடன் சீமான் இருப்பதுபோல வேறு புகைப்படம் எதுவும் இணையத்தில் எங்குமே இல்லை. சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா? இல்லை சந்திக்கும்போது புகைப்படம் எடுக்கவில்லையா என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. பிரபாகரன் பெயரையே யாரும் உச்சரிக்காத சூழலில் நான் வந்தபிறகுதான் இங்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் சூழல் உருவானது என சீமான் சொல்கிறார். அது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அதை ஏற்க முடியாது.
அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்ற முறையில் நான் வறுத்தப்பட்டிருக்கிறேன். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் சொல்லும் நிறைய தகவல்கள் உண்மைக்கு மாறாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க, ‘எல்லாளன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய மின்னல் முருகன் ஒரு பேட்டியில், சீமான், பிரபாகரனை சந்தித்ததும், அவருடன் 3 நாட்கள் தங்கி இருந்ததும் உண்மை எனத் தெரிவித்திருக்கிறார்.
“வைகோ, பாரதிராஜா மற்றும் பலர் அமைதி சூழலில் போய் பிரபாகரனை பார்த்தார்கள். ஆனால் சீமான் ஈழத்துக்கு சென்ற காலம் போர் நடைபெற்ற உச்சம். நான் அப்போது அங்கு இருந்தேன். சீமான் கட்சியில் எல்லாம் நான் கிடையாது. ஆனால், அவர் அங்கு வந்ததும், இருந்ததும் உண்மை. தமிழ் பற்றாளராக இருந்ததால் தான் சீமான் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர்கள் மத்தியில் உரையாற்ற வைக்கப்பட்டார் என்றும் சீமானுக்கு ஜால்ரா தட்டுவதைப்போல சொல்லியிருக்கிறார் மின்னல் முருகன்.

”’கோ” திரைப்படத்தில் வருவதைப் போல சங்கீ கூட்டத்தின் பேச்சை அவர்கள் சொல்லுகிற திட்டங்களை தனது பேச்சின் மூலம் செயல்படுத்தி வருகிற சீமான் பதவிக்காக அமைதிப்படைத்தில் வரும் அமாவாசை போல எதை வேண்டுமானாலும் செய்ய தயங்காதவர் என்பது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் கன்னடத்து பைங்கிளி நடிகை விஜயலட்சுமியை சீரழித்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் சீமான் கொட்டம் அடங்கி இருக்கும் ஆனால் திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்றே சொல்லுகிறார்கள் ஈழத் தமிழர்கள்.
இன்னும் யார் யார் புகைப்படத்துடன் தான் இருப்பதைப் போல எடிட் செய்து வைத்து உலகெங்கிலும் பிச்சை எடுத்து வருகிறாரோ என தெரியவில்லை என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர்.
ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் செய்த சீமான் புகைப்படம் குறித்து தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த டைரக்டர் ராஜ்குமாருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பலர் பொது தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. சீமான் செய்த இந்த பிராடு தனத்திற்கும் போலியாக புகைப்படங்களை மார்ஃபிங் செய்து உலக ஈழத் தமிழர்களை ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியது. சீமானின் இந்த பிராடுத்தனம் குறித்து உலகம் முழுவதிலிருந்தும் பல எதிர்ப்பு அலைகள் எழுந்து வருகிறது சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என அனைவரும் சீமானை சொல்ல முடியாத வார்த்தைகளால் கேட்க முடியாத வார்த்தைகளால் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சந்தோஷமாய் குடித்து கும்மாளம் அடிச்சு ஊறுகாசில சோறு தின்னுட்டு இருக்குற சீமா சொத்துல இப்படி மண்ணு போட்டுட்டியே ராஜ்குமார் என்ற வாசகம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. உண்மையைச் சொன்னால் கசக்கத்தானே செய்யும்.
