தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.

October 16, 2021

By இரா. தேவேந்திரன்.

தூத்துக்குடியில் கொலை மற்றும் கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரை முருகன் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39).இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 90க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது..

கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் முத்தையாபுரம் பொட்டலட்காடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை நேற்று பிற்பகலில் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது போலீசார் மீது அவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பமுயன்ற போது துரைமுருகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் எதிரொலியாக பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரவுடி துரை முருகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணையை தொடங்கினார்.

Share:

இரா. தேவேந்திரன்.

October 16, 2021

Leave a Comment