chennireporters.com

மணல் கொள்ளையை தடுக்கக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது காட்டு காக்கா நல்லூர் அங்கிருந்து கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் வழியில் தடுப்பணை உள்ளது.

அதன் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள வேலூர் மாவட்டம் கத்தாழம்பட்டு கிராமத்துக்கு உட்பட்ட நாகநதி ஆற்றில் மிகப்பெரிய அளவில் மணல் கொள்ளை நடை பெற்று வருகிறது.

ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் பொது மக்கள்….

மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அடிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கூண்டு வாகனத்தில் பல யூனிட் மணலை வாரி செல்கிறார்கள்.

இது சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் கொடுப்பவர்களை மணல் கொள்ளையர்கள் மிரட்டி வருகிறார்கள் மிரட்டல் விடும் மணல் கொள்ளையர்களை கண்டித்தும் .

இயற்கை மற்றும் நீர்நிலை பாதுகாப்பாளர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் விவசாயிகள் ஆகியோர் ஒன்றுதிரண்டு ஆற்றில் இறங்கி மணல் கொள்ளையர்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க.!