chennireporters.com

#brutally assaulted பெண் காவலரை சரமாரியாக வெட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட கணவன் தலைமறைவு.

காஞ்சிபரத்தில் பட்ட பகலில்  பெண் காவலரை கொடுரமாக வெட்டிய கணவரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  பெண் காவலர் மீதான நடத்தப்பட்ட   வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிருக்கு போராடி வரும் காவலர் விரைவில் குணமடையவேண்டும்  என்று சமூக வலைதலங்கில்  நெட்சன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.டில்லிராணி

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராணி. இவர் காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன். இந்த தம்பதியர்கள்  இருவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பெண் காவலர் டில்லிராணி  வழக்கம் போல் தனது பணியினை முடித்து விட்டு காவல் நிலையத்தில் இருந்து பிற்பகலில் தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பெரிய காஞ்சிபுரம் சாலை  பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சீருடையில் இருந்த டில்லிராணியை சரமாரியாக வெட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிகிச்சையில் டில்லிராணி எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் பெண் காவலர் டில்லிராணியின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தும், 108 ஆம்பூலன்ஸ் வாகனம் மூலம் பெண் காவலர் டில்லிராணியை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் டில்லிராணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவர் மீது சந்தேகம் மேலும் இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த சிவ காஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டும் டில்லிராணியிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் தனது கணவர் மேகநாதன் தான் இச்செயலை செய்ததாக பெண் காவலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆகையால் அவரது கணவரை முதலில் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.டில்லிராணி

ஏற்கனவே கணவன் மனைவி இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் பெண் காவலர் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் விவகாரத்து கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பெண் காவலர் மனுவும் கொடுத்துள்ளார். இந்த சூழலில்தான், குடும்ப தகராறில் விவகாரத்து கேட்டு பிரிந்து வாழும் தனது மனைவியான டில்லிராணியை, அவரது கணவர் மேகநாதன்தான் வெட்டியது  ஏன் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் டில்லிராணி கணவர்

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீருடையில் இருந்த பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்தி.

பெண் காவலரை வெட்டிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கணவர் மேகநாதனை தனி படை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மேக நாதனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!