#Pesticides in vegetables; காய்கறிகளில் பூச்சிக்கொல்லி.

March 6, 2025

By தே. ராதிகா

அரவை மில்களில் நிறம் இல்லாத மிளகாயை அடிமாட்டு விலைக்கு வாங்கி… கலருக்கு ஒரு பொடி, காரத்திற்கு ஒரு பொடி கலக்குகிறார்கள்.

புழு வைக்காமல் இருக்க ப்ரப்பனோபாஸ் பவுடர். மிளகாய் தூள் முதற்கொண்டு காரமா இருக்க கலப்படம் செய்கிறார்கள்.

வாங்கற அத்தனையும் இப்படித்தான் எல்லாமே போலியாகவும் கலப்படமாகவும் விற்கிறார்கள்.  இனிமேல் நாமளே உணவு பொருட்களை உற்பத்தி செஞ்சா தான் நஞ்சில்லா உணவை உட்கொள்ள முடியும். நம்முடைய நலனை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.பூச்சி மருந்து தெளிப்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்-தோட்டக்கலைத்துறை விளக்கம் | Instructions to be followed in pesticide spraying-Horticultural description

இல்லையென்றால், சம்பாதிப்பதை மருத்துவமனைக்கு கொடுத்துக்கொண்டு, தீராத நோய்களால் செத்துத் தொலைய வேண்டியதுதான்.

காய்கறிகள், பழ வகைகள், பருப்பு வகைகள், தானிய வகைகள் அனைத்திலும் பூச்சி, புழுக்கள் பிடிக்க கூடாது என்று இந்த மருந்து தெளிக்கப்படுகிறது.  ஆனால் இது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து இதுவரை அதிகாரிகள் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.

தமிழக அரசு வழங்கும் ரேஷன் அரிசிகளிலும் இத்தகைய மருந்துகள் தான் தெளிக்கப்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாடு வேளாண்மை துறை அதிகாரிகள் இந்த மருந்து தெளிப்பது நாள் மனிதர் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்று சொல்கிறார்கள் . ஆனால் அந்த மருந்து குறித்து ஆய்வு செய்த பிறகு உண்மை நிலைய தெரிய வரும்.

Share:

தே. ராதிகா

March 6, 2025

Leave a Comment