10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் அமான் இவர் பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் இடம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை 1980 ஆம் ஆண்டு எனக்கு எழுதிக் கொடுத்து விட்டார். சமீபத்தில் இந்த நிலத்தை ஈசி போட்டு பார்த்தபோது எனது தந்தை இந்த நிலத்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்தது போல காட்டுகிறது.
பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ்
எனக்கு எனது தந்தை 1980 ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்தார். ஆனால் 1987-ம் ஆண்டு எனது தந்தை அந்த நிலத்தை காந்தம்மாள் என்உபவருக்கு எழுதிக் கொடுத்ததைப்போல ஆவணங்களை தயார் செய்து போலியாக பதிவுத்துறை ஆவணங்களில் மாற்றம் செய்து 85 சென்ட் இடத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலத்தின் தற்போதைய மார்கெட் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் ஒரிஜினல் ஆவணங்கள் என்னிடம் உள்ள நிலையில் போலியாக பத்திரங்கள்தயார் செய்யப்ட்டு பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு போலியாக பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் உத்தரவிட்டிருந்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் புகாரில் கூறப்பட்டிருந்ததைப் போல தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மேலும் விசாரணை நடத்த பதிவுத்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜுவாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டார். சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு உத்தரவின் பேரில் எஸ்.பி. வினோத் சாந்தாராம் மற்றும் டிஎஸ்பி புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். தீவிர விசாரணை நடத்தப்பட்ட போது தற்போது சேலம் பதிவுத்துறை டிஐஜி யாக இருக்கும் ரவீந்திரநாத் தென் சென்னை உதவி ஐ.ஜி.யாக பணியாற்றியபோது இந்த தவறு நடந்திருப்பதும் அவரே அதில் அவருடைய விரல் ரேகையை பதிவு செய்து லாகின் செய்து ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து தற்போது சேலத்தில் டி.ஐ.ஜி அலுவலகத்தில் பணியில் இருந்த ரவீந்திரநாத்தை டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு முக்கிய நபர்கள் இந்த விஷயத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதனையடுத்து நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி. புருஷோத்தமன் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பின்பு அவர் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். எட்டு முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்
கடந்த மாதத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல இடங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது .பல பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நேர்மையான கரை படியாத ஒரே ஒரு பத்திரப்பதிவாளர் யாரும் இல்லை என்பது நாடறிந்த உண்மை முன்னாள் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி மற்றும் தற்போதைய ஐஜி தினேஷ் பொன்ராஜ் இந்த இரண்டு அதிகாரிகளைத் தவிர தமிழ்நாட்டில் நேர்மையான பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுபவர்கள் ஒருவர் கூட இல்லை என்பதே அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் குறைந்தபட்சம் சொத்து மதிப்பு 20 கோடியில் இருந்து 50 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறது.
அதேபோல மாவட்ட பதிவாளர்கள் டிஐஜி, ஐஜி போன்ற போன்ற அதிகாரிகளின் சொத்து மதிப்பு 100 கோடிகளைத் தாண்டும் ஏற்கனவே இருந்து ஓய்வு பெற்ற ஜஃபாரின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும் சேலத்தில் உள்ள குறிப்பாக ஏற்காட்டில் உள்ள அவுட்டோர் சொத்து மதிப்பு மட்டும் 20 கோடியை தாண்டும் எனவே ஒட்டுமொத்தமாக அரசு ஒவ்வொரு அதிகாரிகளின் செல்போன் கணக்கையும் ஒவ்வொரு அலுவலகத்தின் ஒட்டுமொத்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஐஜி அலுவலகத்தில் தனி அலுவலர்களை வைத்து கண்காணிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடமும் பத்திரப்பதிவுத்துறை தலைவர் முன்னிலையில் ஆஜராகி தங்களுடைய சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும் என்கின்றனர் அறப்போர் இயக்கத்தினர். பத்திரப்பதிவுத் துறையில் சாதாரண ஊழியர் முதல் அதிகாரி வரை நேர்மையானவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு புகழாரம் சூட்டவும் அவர்களுக்கு பொற்களிடம் வழங்கவும் தயாராக இருக்கிறோம்.