chennireporters.com

#100 crores fraud by doubling the money; பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக 100 கோடி மோசடி. மூன்று பேர் கைது.

ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது.

Latest Tamil Newsசேலம்: நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, ரூ.5 லட்சம் லஞ்ச பணத்திற்கு, ரூ.10 ஆயிரம் முன்பணம் வாங்கிய தாசில்தாரை சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
நிலத்தை அளந்து தருவதற்கு ரூ.2 ஆயிரம்: லஞ்சப் பணத்துடன் சிக்கினார் வி.ஏ.ஓ.,!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக , கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளார். சேலம் மஞ்சுளா.. அந்த தாசில்தார் அமாவாசைக்கு அட்வான்ஸ் கேட்டாராம்.. நில அளவீடு செய்ய கேட்டால்? போச்சு | Salem Land measurement, stream encroachments and why did Manjula ...அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக தை அமாவாசை தினமான இன்று ஜன.,29ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, இது சம்பந்தமாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரு.10 ஆயிரத்தை முன்பணமாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!