Chennai Reporters

காதலிக்கு கத்தி குத்து காதலன் தற்கொலை வாணியம்பாடியில் சோகம்…

வாணியம்பாடியில் காதலில் சந்தேகம் ஏற்பட்டு  பணிரெண்டாம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ,வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்த பணிரெண்டாம் வகுப்பு மாணவி கோமதி(18) அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சசிகுமார் (24) இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கோமதியின் காதலன் சசிகுமார்.

இந்நிலையில் தினந்தோறும் வீட்டிற்கு வெளியில் உள்ள மைதானத்திற்கு அருகில் அமர்ந்து சசிகுமார் நள்ளிரவு வரை போனில் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சசிகுமார் நேற்றிரவு கோமதியை செல் போன் மூலம் அழைத்துள்ளார் அவரது வீட்டின் அருகே உள்ள  மைதானத்திற்கு  வரவழைத்த சசிகுமார் நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

திடீரென தன்னிடம் இருந்த கத்தியை கொண்டு கோமதியின் கழுத்தில் இரண்டு இடங்களில் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வலி தாங்காமல் கூச்சலிட்ட கோமதியை  அங்கேயே விட்டுவிட்டு சசிகுமார் தப்பியோடி விட்டார்.

சசிகுமாரின் வீடு.

இந்நிலையில் கோமதி ரத்த வெள்ளத்தில் தனது வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் சொன்னார்.

மகள் கோமதியின் நிலையைப் பார்த்ததும் பெற்றோர் செய்வதறியாது தவித்தனர்.

உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோமதியின் தந்தை போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சசிகுமார் தனது வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிரிப்பது தெரியவந்தது.

அதன்பின் உடலை கைப்பற்றிய போலீசார் வாணியம் பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலியை கழுத்தை அறுத்து விட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டது பற்றி

திருப்பத்தூர் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!