chennireporters.com

+2 தேர்வு ரத்து! மாணவர்களின் தகுதி திறன் பாதிக்கப்படுமா?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் என 60 சதவீதம் பேர் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் தமிழக அரசு திடீரென 12ம் வகுப்பு தேர்வு ரத்து என அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா இரண்டாவது அலை காரணமாக சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார் இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு செய்தார்.

ஆனால் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் படிப்பு திறனும் கற்றல் மற்றும் கேட்டல் திறனும் குறைந்த அளவிலேயே இருக்கிறது.ஏறக்குறைய கிராமப்புறங்களில் 60 சதவீதத்திற்கு மேல் ஆண்ட்ராய்டு போன் இல்லாத மாணவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு அரசு தரப்பு பள்ளிகளிலிருந்து சரியான ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படவில்லை என்று கிராமப்புற பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களுடைய அறிவுத்திறனும் கேட்டல் திறன் எந்த வித முன்னேற்றம் ஏற்பட்டு இருக்காது என்கிற கேள்வியை முன் வைக்கின்றனர்
கல்வியாளர்கள்.

அடுத்த ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் எஞ்சினியரிங் போன்ற மேல்நிலை படிப்பு படிப்புகளில் 12ஆம் வகுப்பில் இருந்து எப்படி மாணவர்களை தேர்வு செய்யப் போகிறார்கள்.

அரசு எப்படி அதை கையாளப் போகிறது என்கிற கேள்வியை இப்போதே முன்வைக்கிறார்கள் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் .

நீட் தேர்வை அரசு எப்படி கையாளப் போகிறது.

அனிதாவின் மரணம் போல இனிமேல் எந்த மரணமும் ஏற்படக் கூடாது என்பதை
கவனத்தில் கொண்டு தி.மு.க அரசு எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க.!