chennireporters.com

பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூரில் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவர் பொதுப்பணித்துறை வேலூர் மண்டல செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஷோபனா அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் அவரது வேலூர் குவார்ட்டரஸ், ஓசூர் வீடு மற்றும் கார் ஆகியவற்றிலிருந்து ரூபாய் 2 கோடியே 26 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓசூர் நேருநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷோபனா, இவர் பொதுப்பணித்துறையில் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி பிரிவில் செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

அதாவது அரசு கல்வி நிறுவனங்களில் கட்டப்படும் கட்டுமான வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கி பில் சேங்ஷன் செய்யும் பணி.

குறிப்பாக இந்த ஊழல் அதிகாரி வேலூர் , திருவண்ணாமலை, கடலூர், ராணிப்
பேட்டை,தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளின் கட்டுமான பணிக்கான வேலூர் மண்டல தொழில்
நுட்ப கல்வி செயற்பொறியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் வேலூரில் பணியாற்றி வருகிறார்.

6 மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் வழங்குவது,
நிதி ஒதுக்குவது ஷோபனாவின் பணியாகும்.

இந்நிலையில் இவர் லஞ்சம் வாங்குவதாக  வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலிசார், டி.எஸ்.பி.கிருஷ்ணகிரி கிருஷ்
ணராஜன் தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினி, விஜி ஆகியோர் கண்கானித்து வந்தனர்.

அப்போது ஷோபானா காரில் புறப்பட்டு ஓட்டல் ஒன்றில் நிறுத்தியுள்ளார்.

அப்போது அவரை மடக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.இது குறித்து மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் சி.முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் அதிகாரி ஷோபனா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வேலூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ளஅவர் தங்கியிருந்த அரசு குடியிருப்பில் சோதனையிட்ட போது அங்கு 15 லட்சத்து 80ஆயிரத்தையும்,

3.லட்சத்து 92 ஆயிரத்துக்கான காசோலைகளையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷோபனாவை அழைத்து சென்றுதீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதில் அவரது வீட்டில் ரூபாய் 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 16 வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் அதாவது நிரந்தர வங்கி வைப்பு தொகை மற்றும் பத்திரங்கள்கைபற்றப்பட்டுள்ளன.அது தவிற ஒரு பெரிய வாங்கி லாக்கரின் சாவியை பறிமுதல் செய்தனர்.

லாக்கரை திரந்து பார்த்து பிறகுதான் அதில் என்ன பணமா, நகையா,வைரங்கள என தெரியரும் என்கிறார்கள்65 சவரன் தங்கம், 1.320கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் அசையா சொத்துக்களின் டாக்குமென்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் சுல்தானா பாஷா, ரஜினி, விஜி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க.!