#exclusive story
சென்னை பிரஸ் கிளப் எனப்படும் பத்திரிகையாளர் மன்றத்தின் அலுவலக மேனேஜராக வேலை பார்த்து வரும் ஜேக்கப் என்பவருக்கு 1கோடியே 65 லட்சம் மதிப்பில் வீடு இருப்பதாகவும் 20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டு தீயாய் பரவி வருகிறது.
உண்மை நிலவரம் என்ன ஜேக்கப்புக்கு அவ்வளவு சொத்து இருக்கிறதா என்பது குறித்து நாம் விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்களை நாம் அப்படியே நமது வாசகர்களுக்கு தருகிறோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற ஆபீஸ் மேனேஜர் ஜேக்கப்புக்கு ரூபாய் 20 கோடி சொத்து வந்தது எப்படி? என்று சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரில் பத்திரிகையாளர்களுக்கு சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் ஒரு இடத்தை அரசு ஒதுக்கியது. அந்த இடத்தில் SRM நிறுவனம் ஒரு கட்டடத்தை பத்திரிகையாளர்களுக்கு கட்டிக் கொடுத்தது.
அதிலிருந்து அந்த இடத்தை பத்திரிகையாளர்கள் பயன்படுத்தி வந்தனர். செய்தியாளர் கூட்டம் நடத்தவும் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டும் அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு சங்கம் செயல்பட்டு வந்தது. அதேபோல பத்திரிகையாளர்கள் அந்த இடத்தில் உணவு இடைவேளை நேரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளவும் விளையாடவும் பயன்படுத்தி வந்தனர்.
சென்னை பிரஸ் கிளப்
இந்த நிலையில் காலப்போக்கில் அளவுக்கு அதிகமான வருமானம் சங்கத்தின் மூலம் ஈட்டப்பட்டது. சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்திற்கு மேல் எப்டியில் முதலீடு( F.D. investment) செய்யப்பட்டு அதன் மூலம் வட்டி பெறப்பட்டு வந்தது. அது தவிர கார்ப்பரேட் பிரஸ் ஐடி கார்டு (Corporate press identity card) என்ற பெயரில் பல தொழிலதிபர்களுக்கு ஒரு அடையாள அட்டை 3 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாய் வரைக்கும் விற்று பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது.
சேகர்ரெட்டி
உதாரணத்திற்கு மணல் கொள்ளை மாஃபியா சேகர்ரெட்டி கைது செய்யப்பட்டபோது அவர் பாக்கெட்டில் சென்னை பிரஸ் கிளப் ( CORPORATE MEMBERSHIP ) என்ற பெயரில் ஒரு அடையாள அட்டை இருந்தது குறிப்பிட தக்கது.
ஜேக்கப்
இது போல பல தொழிலதிபர்களுக்கு கார்ப்பரேட் கார்டு கொடுத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதாவது CORPORATE MEMBERSHIP அடையாள அட்டை வழங்கப்பட்டதில் மட்டும் 1கோடியே 50 லட்சம் ரூபாய் லாபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த 25 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய சங்கத்தின் மொத்த வருமானம் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. இதில் கடந்த 22 ஆண்டுகளாக பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் நடத்தாமல் சங்கத்தை நிர்வாகிக்காமல் விட்ட காரணத்தினால் சங்கம் காலாவதி ஆகிவிட்டது.
இந்த நிலையில் சென்னை சேர்ந்த பத்திரிகையாளர் விமலேஷ்வரன் என்பவர் காலாவதியாகி இருந்த சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரில் இருந்த சங்கத்தின் பெயரை அவர் அரசு விதிகள் படி பெற்று சங்கத்தை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கும் பிரஸ் கிளப்பில் இனிமேல் எங்களுடைய பெயரையும் லோகோவையும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் வழக்கு தொடர்ந்ததால் அதன் அடிப்படையில் தமிழக அரசு பதிவுத்துறை தலைவர் சென்னை பத்திரிகையாளர் மன்றம் என்ற பெயரில் ஒரு அணியும், சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் மூலம் நின்று வெற்றி பெறாத பெருமாள் என்ற பாரதி தமிழன் ஒரு அணியாகவும் பேராண்மை செய்தி நிறுவனத்தை நடத்தும் விமலேஷ்வரன் என்பவர் சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் ஒரு கூட்டம் கொள்ளையடித்து கொழுத்து தின்று வருவதை பத்திரிகையாளர்கள் எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் இந்து ராம், நக்கீரன் கோபால் மற்றும் பல முக்கிய நபர்கள் ஒரு குழுவை அமைத்து தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் பெருமாள் என்ற பாரதி தமிழன் தற்காலிக செயலாளராக பதவி வகித்திருந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடகமாடி கணக்கு காட்டாமல் வெளியேறினார்.
இந்த நிலையில் உடனடியாக பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதில் நடந்துள்ள ஊழல்களை கண்டுபிடித்து முறைகேடுகளை சரி செய்ய வேண்டும் என்றும் ஒரு அணி உருவாக்கப்பட்டது. ஏற்கனவே தின்னு ருசி கண்டவர்கள் விடமாட்டார்கள் என்கிற பழைய பழமொழியின் படி ஏற்கனவே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மற்றும் முக்கிய ஆவணங்கள் எல்லாம் இரவோடு இரவாக அகற்றப்பட்டது புதியதாக ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்க்கும் சிசிடிவி காட்சிகள் பொருத்தப்பட்டன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த பல முக்கிய கோப்புகள் காணாமல் போனது. வங்கியில் வைக்கப்பட்டு இருந்த முதலீடு பணம் 17 லட்சம் காணாமல் போனது. பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் மர்ம குகை போல இருக்கும் பிரஸ் கிளப்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மேனேஜராக வேலை பார்த்து வருபவர் நாகர்கோவிலை சேர்ந்த ஜேக்கப் இவர் வேளச்சேரி அடுத்த ஜல்லடியான்பேட்டையில் வசித்து வருகிறார்.
ஜேக்கப் வீட்டின் முகப்பு தோற்றம்.
இவர் அந்த பகுதியில் 16 அடி சாலையில் சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் கீழ்த்தளம் உட்பட இரண்டு மாடி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 5 கோடிக்கு மேல், நாகர்கோவில் அருகே பல இடங்களில் வீட்டுமனைகள் வைத்திருப்பதாகவும் விவசாய நிலங்கள் வைத்திருப்பதாகவும் சொல்லுகிறார்கள். இவரது மகள் மருத்துவம் படித்து வருகிறார். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கேட்கப்பிற்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து வந்தது எப்படி என்று கேள்வியை எழுப்புகின்றனர் பத்திரிகையாளர்கள். இது குறித்து மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபால் அவர்கள் ஜேக்கப்பை நேரில் அழைத்து உங்களுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் அப்படி ஒரு கேள்வியை நம்மிடம் கேட்பார் என்று ஒருபோதும் நினைத்திருந்தாத ஜேக்கப் ஐந்து நிமிடம் இதயம் செயல்படாமல் ஜேக்கப் நிதானம் இழந்து காணப்பட்டார். மெல்ல மெல்ல ஆசுவாசப்படுத்தி கொண்ட ஜேக்கப் எனது சொந்த ஊரிலுள்ள சொத்து விற்கப்பட்டு எனக்கு வந்த பாகத்தில் வாங்கி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்கின்றனர் சில மூத்த பத்திரிகையாளர்கள். நக்கீரன் கோபால் கேட்ட கேள்வி குறித்தும் ஜேக்கப் தரப்பினர் அவரைப்பற்றியும் அவர் நிறுவனத்தில் ஒழுங்காக சம்பளம் தருவதில்லை இவர் நம்மை கேள்வி கேட்கிறார் என்று கமண்ட் அடித்தார்களாம். இந்த பத்திரிகையாளர் மன்றத்தில் ஜேக்கப் அவர்களுக்கு இஎஸ்ஐ பிஎப் தொடர்பான விஷயங்களும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புதிய நிர்வாகிகளாகச் சென்ற மூத்த பத்திரிகையாளர் இந்து ராம், ஜேக்கபின் தில்லுமுல்லு பிராடுத்தனம் 420 தனம் தெரியாமல் உண்மையிலேயே வறுமையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்க காசோலையில் கையொப்பமிட்டு கொடுத்துள்ளார்.
ஜேக்கப்
பிராடுத்தனம் செய்த ஜேக்கப் பின் சொத்து மட்டுமே 20 கோடிக்கு மேல் என்றால் 25 ஆண்டு காலம் பொறுப்பிலிருந்த பெருமாள் என்ற பாரதிதமிழன் மற்றும் மற்ற நிர்வாகிகள் சொத்து எவ்வளவு என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர இருக்கிறது. ஏறக்குறைய பூனைக்குட்டி வெளியே வர ஆரம்பித்துவிட்டது என்பதைப் போலவே அமைகிறது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாக நிலைமை தற்போது உள்ளது…
இந்த செய்தி குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அவர்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
தொடரும்…