chennireporters.com

#3 Crore Land Fraud Deed; 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி பத்திரம் தயார் செய்தவர்கள் மீது கமிஷ்னரிடம் புகார். சிக்கும் அதிகாரிகள்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், தண்டரை கிராமம், நத்தம் பழைய சர்வே எண் 337/1 ல் 12292 சதுர அடி உள்ள இடத்தில் இரண்டு வீடுகளும் காலி மனையும் உள்ளன. அதை நான் என் குடும்பத்தோடு 50 வருடங்களுக்கு மேல் ஆண்டு அனுபவித்து வருகிறேன்.எங்களுக்கு சொந்தமான சொத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் பகுதியை சேர்ந்த பல்லத்தெருவில் வசிக்கும் விநாயகம் மகன்கள் அமுல்ராஜ், நெடுஞ்செழியன் மேட்டு தெருவில் வசிக்கும் சோமசுந்தரம் ஆகியவர்களின் தூண்டுதலின் பெயரில் ஜெயராமன் மகன் ராமு, ராமு மகன் மதன் மற்றும் ஆவடி சார்பதிவாளர் பிரகாஷ் குமார் அவர்கள்  போலி பட்டா என்று தெரிந்தே கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 16529 எண்ணில் ஜெயராம் மகன் ராமு, மதன் என்பவருக்கு தான செட்டில்மெண்ட் பத்திரம் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதே நிலத்திற்கு என் பெயரும் மற்றும் ஜெயராம் மகன் ராமு என்ற பெயருக்கும் சேர்த்து கூட்டு பட்டா போலியாக தயாரித்து தனக்கு சொந்தமில்லாத சொத்தை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மோசடி செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு டிசம்பர் ஆறாம் தேதி அன்று ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் என் மகன் மற்றும் மகனுக்கு ஆவண எண் 1757 எண்ணாக தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட்டேன். இந்நாள் வரை எங்களுடைய அனுபவத்தில் இந்த இடம் உள்ளது.

ராமு அவர்களின் மகன் மதன்

எனவே எங்களுக்கு சொந்தமான சொத்தை ஏமாற்றி மற்றும் போலி பட்டா தயாரித்து மோசடி செய்த விநாயகம் மகன்கள் அமுல்ராஜ் என்கிற நெடுஞ்செழியன் மற்றும் சோமசுந்தரம் இவர்களின் தூண்டுதலின் பெயரில் ஜெயராம் மகன் ராமு மற்றும் ராமு அவர்களின் மகன் மதன் மற்றும் மோசடி பத்திரம் பதிவு செய்ய உடனடியாக செயல்பட்ட ஆவடி சார்பதிவாளர் பிரகாஷ் குமார் மற்றும் ஆவணம் தயாரித்த வழக்கறிஞர் எம் சுரேஷ் மற்றும் சுப்பிரமணி மகன்கள் மகன் மாரியப்பன் மற்றும் பார்த்தசாரதி அவர்களின் ஆவணத்தின் சாட்சி கையப்பம் வைத்துள்ளார்கள் இவர்கள் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் மேலும் என் வயது முதிர்வை கருத்தில் கொண்டு விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பொன்னுரங்கம் போலீஸ் கமிஷனருக்கு அளித்த புகாரில் கூறியுள்ளார்.

இந்த செய்தி குறித்து சம்பந்தப்பட்ட ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் பிரகாஷ் குமாரிடம் அவர் தரப்பு விளக்கத்தை கேட்டோம். அவர் நம்மிடம் சொன்ன விளக்கம்; அவர் இது சம்பந்தமாக வழக்கு தொடுக்க போலீசுக்கு கடிதம் கொடுத்திருக்கிறேன். நான் என்று சொல்வதை மறுக்கிறேன் அது உண்மை அல்ல. நான் எதிர் தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டேன் என்று சொல்வது உண்மையல்ல என் கடமையில் இருந்து ஒரு போதும் நான் தவறு செய்யவில்லை. அப்படி நான் தவறு செய்தேன் என்று நிருபித்தால் என்னுடைய வேலையை நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். நான் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி சமூகத்தில் பின்தங்கி இருக்கிற மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறவன் நான். என் மீது பழி சுமத்துவது நியாயம் அல்ல.பொன்னுரங்கம்

சம்பந்தப்பட்ட நபர்கள் ஆன்லைனிலேயே பட்டாவை அவர்கள் பெயருக்கு மாற்றி வந்து கொடுத்ததின் பேரில்தான் நான் இடத்தை பதிவு செய்தேன். எனவே நான் பத்திரத்தை பதிவு செய்ததில் எந்தவித தவறும் நடக்கவில்லை என்று அவர் தரப்பு விளக்கத்தை அளித்தார். எனவே பொன்னுரங்கம் போலீஸ் கமிஷனருக்கு அளித்துள்ள புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினால் தான் உண்மை தன்மை தெரிய வரும்.

மேலும் தலைமை இடத்து எழுத்தர் சிவசங்கர் கடந்த ஏழு வருடமாக ஆவடி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்துள்ளது. எனவே பத்திரப்பதிவுத்துறை தலைவர் உடனடியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.பார்த்தசாரதி என்கிற புரோக்கர் முறையான ஆவண எழுத்தராக பதிவு செய்யவே இல்லை. அவர் சில வழக்கறிஞர்களிடம் முத்திரையை வாங்கிக் கொண்டு தானாக ஆவண எழுத்தர் என்று சொல்லிக் கொண்டு பிராடுத்தனம் செய்து மோசடி பத்திரங்களை பதிவு செய்வதில் நம்பர் ஒன்னாக விளங்கி வருகிறார் என்கிறார்கள் சில நேர்மையான ஆவண எழுத்தர்கள். அவர் இதுவரை பத்திரப்பதிவு செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க.!