சிறப்பு செய்தி# பிரத்யேக செய்தி#
தூத்துக்குடி மாவட்டத்தில் லாக்அப் டெத் வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்ற ஸ்ரீவைகுண்டம் சப் டிவிஷன் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அங்கு பொறுப்பேற்றதிலிருந்து செய்த அராஜகங்கள், அட்டகாசங்கள் குறித்த ஒரு சிறப்புப் பார்வை தான் இந்த செய்தி தொகுப்பு.
தூத்துக்குடியில் ஒரு அடேங்கப்பா வசூல் மன்னன் ‘இங்கு எஸ்பி, டிஐஜி. ஐஜி எல்லாமே நான்தான் என்னை அசைக்க முடியாது”என்று ஆட்டம் போட்டவர்.
ஸ்ரீவைகுண்டம் சப் டிவிஷன் டிஎஸ்பி ராமகிருஷ்ணன்
மணல் கடத்தல் + குட்கா + ஒரு நம்பர் லாட்டரி = மாதத்துக்கு ரூ. 1.60 கோடி மாமூல் வசூல் செய்து தென் தமிழகத்தில் வசூல் ராஜா நம்பர் ஒன்னாக வலம் வந்தவர்.
இவரை கேட்பதற்கு ஆளே இல்லையா என்ற ரேஞ்சுக்கு தூத்துக்குடி காவல் மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சப் டிவிஷனில் பணிபுரியும் ஒரு டிஎஸ்பி ரவுடி போல வலம் வருவதையும், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததைப்பார் என்ற ரேஞ்சுக்கு ஆணவத்தில் அடாவடி மாமூல் வசூலில் இறங்கி வியாபாரிகளையும், பொதுமக்களையும், செங்கல் சூளை அதிபர்களையும் மிரட்டிப் பணம் பறித்து காக்கி சட்டை போட்டு கொண்டு கொள்ளைக்காரன் போல நடந்து கொள்வது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரைப் பற்றி எஸ்பியிடம் புகார் அளித்தாலும் எந்த பயனும் இல்லை. அது கிடப்பில்தான் கிடக்கும் – இதுதான் தற்போது ஸ்ரீவைகுண்டம் சப் டிவிஷன் மக்களின் ஆதங்கம்.
‘தூத்துக்குடி காவல் மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சப்டிவிஷனில் டிஎஸ்பியாக இருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் இங்கு போஸ்டிங் போடப்பட்டது முதல் இவரது அராஜகப்போக்கு, அடாவடி, யாராலும் அவரை அசைக்க முடியாததாகி விட்டது என்கின்றனர். காரணம் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஆசியோடு இங்கு இவருக்கு போஸ்டிங் போடப்பட்டிருப்பதுதான் என தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரே புலம்புகின்றனர். ஒரு ரவுடிக்குறிய பத்து பொருத்தமும் இந்த டிஎஸ்பிக்கு உண்டு.
ஒரு ரவுடிக்குறிய பத்து பொருத்தமும் இந்த டிஎஸ்பிக்கு உண்டு.
கட்டாயமாக அழைத்து கறார் கட்டப்பஞ்சாயத்து, கட்டாய மாமூல் வசூல் என ஒரு ரவுடிக்குறிய பத்து பொருத்தங்களும் இந்த டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு அம்சமாக பொருந்தும். யார் இவரை எதிர்த்து பேசினாலும் உடனடியாக அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பாயும். ஒருவரை பழிவாங்க வேண்டும் என்றால் எந்த லெவலுக்கும் இறங்கி செய்வார். இவர் கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடங்களில் யாரும் எதிர்த்து பேசக்கூடாது. பேசினால் வழக்குத்தான். மொத்தத்தில் காக்கி யூனிபார்ம் போட்ட கவர்மண்ட் ரவுடியாக, கொடூர வலம் வருகிறார் இந்த ராமகிருஷ்ணன் இப்படித்தான் இவரை ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி பொதுமக்கள் அழைக்கின்றனர்.
மணல் மாபியாக்களிடம் மாதம் ரூ. 1.50 கோடி மாமூல். தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளும் மாபியாக்களுடன் கைகோர்த்து மாதம் அதில் பல கோடிகளை அள்ளுகிறார் இந்த டிஎஸ்பி ராமகிருஷ்ணன். திருட்டு மணல் அள்ளும் மாபியாக்களிடம் ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் என பேசி மாதம் ரூ. 1.50 கோடி வசூல் பார்த்து விடுகிறார் இந்த டிஎஸ்பி.
செங்கல் சூளை அதிபர்களிடம் மாதம் ரூ. 10 லட்சம் வசூல். ஸ்ரீவைகுண்டம் சப்டிவிஷனில் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குறும்பூர், ஏரல், முறப்பநாடு, மற்றும் சேரன்குளம் ஆகிய 7 காவல் நிலையங்கள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் சுமார் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் மாதம் 20 ஆயிரம் ரூபாய் என பேரம் பேசி மாதம் சுமார் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் செங்கல் சூளை வருமானம் மட்டும் மாமூலாக டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு வருகிறது.
மாமூல் வசூலிப்பதில் தனி வியூகம் ; மாமூல் தர மறுக்கும் செங்கல் சூளை அதிபர்களை தனது ரவுடி போலீஸ் பாணியில் ராமகிருஷ்ணன் மடக்கி மிரட்டி மாமூல் வசூலிக்கும் பாணியே தனி. குறும்பூர், கடம்பாகுளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வருவாய்த்துறையிடம் முறையாக அனுமதிச் சீட்டு பெற்று குளத்தாங்கரை மணலை எடுத்துக் கொண்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் வேண்டுமென்றே அத்துமீறி திருடனைப் பிடிப்பது போல மடக்கிப் பிடித்துள்ளார்.
மணல் கொள்ளை என அது தொடர்பாக புகார் அளியுங்கள் என ஏரல் வட்டாச்சியரிடம் வலுக்கட்டாயமாக டிஎஸ்பி ராமகிருஷணன் புகார் தரச்சொல்லி கேட்டுள்ளார். அதற்கு ஏரல் வட்டாட்சியர் இந்த மணல் முறைப்படி அரசாங்கத்திடம் அனுமதி பெற்று எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்படி பொய் புகார் தர முடியும். அதற்கு வாய்ப்பில்லை” என்று கண்டிப்புடன் மறுத்து விட்டார் அந்த நேர்மையான வட்டாட்சியர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.
இதனால் ஏமாந்து போன டிஎஸ்பி ராமகிருஷ்ணன் செங்கல்சூளை அதிபர்கள் மீது திருட்டு மணல் வாங்குவதாக வழக்குப்பதிவு செய்து விடுவேன். என்ன செய்யலாம் என அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து மிரட்டல் விடுக்கவே, பயந்து போன சூளை அதிபர்கள் எதற்கு போலீசை பகைத்துக் கொண்டு என தாமாகவே முன்வந்து ராமகிருஷ்ணனுக்கு மாதா மாதம் ரூ. 20 ஆயிரம் மாமூல் தருவதாக சம்மதித்தனர். இந்த வகையில் மொத்தம் 50 சூளைகளில் இருந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு மாதம் ரூ. 10 லட்சம் மாமூலாக வருகிறது.
மாமூல் வசூலித்துக் கொடுக்க ஹிஸ்டரி ஷீட் ரவுடி நியமனம்.
மாமூல் வசூலித்துக் கொடுக்க ஒரு மீடியேட்டர் வேண்டுமல்லவா அந்த மீடியேட்டராக ராமகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த வரலாற்றுப் பதிவேடு ரவுடி அருண் பிரின்ஸ் என்பவரை நியமித்துள்ளார். அருண் பிரின்ஸ் கட்டப்பஞ்சாயத்தில் கைதேர்ந்தவர். இவரது மனைவி ராஜகுமாரி தமிழ்நாடு காவல்துறையில் இன்ஸ்பெக்டராக உள்ளார். தற்போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரிவதாக தகவல். நெல்லையில் ஏஎஸ்பி பல்பீர் சிங் பல்பிடுங்கிய விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணிக்கு வந்துள்ளார். இந்த பிரின்ஸ் மூலமாகத்தான் ராமகிருஷ்ணன் பெரிய தொகைகளை வசூல் செய்து கொள்கிறார். மனைவி மூலம் அருண் பிரின்ஸ், டிஎஸ்பியிடம் நெருக்கமாகியுள்ளார்.
அராஜக பேர்வழி டிஎஸ்பி ராமகிருஷ்ணனின் மாமூல் வசூல் தனி வியூகம்
அடுத்ததாக ஆழ்வார்திருநகரி பஜார் கடைகளில் மாமூல் வசூலிப்பது எப்படி என்று பிளான் போட்டதில் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு எதுவும் தோன்றவில்லை. வௌிப்படையாகவே ஆழ்வார்திருநகரி பஜார் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டும் அவர்கள் யாரும் மாமூல் தர ஒத்துழைக்கவில்லை.
டிஎஸ்பி ராமகிருஷ்ணனின் மாமூல் வெறிக்கு பகடைக்காயாக பயன்படுத்தப்பட்ட வருவாய்துறை அதிகாரிகள். இதனால் மெகா பிளான் ஒன்றை வருவாய்த்துறையை பகடைக்காய் ஆக்கி ரவுடி அருண் பிரின்ஸ் என்பவருடன் இணைந்து டிஎஸ்பி தனது மெகா பிளானை தனி வியூகமாக செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு விட்டார். அதாவது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஆழ்வார்திருநகரி பஜாரில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரை அழைத்து சென்று கட்டடத்தை இடித்து விடுவோம் என மிரட்டல் விடுப்பது. வியாபாரிகளின் பயத்தை மூலதனமாக்கி பயந்தவர்களிடம் மாதா மாதம் மாமூல் தந்தால் இடிக்க மாட்டோம். வருவாய்த்துறைக்கும் சேர்த்து லஞ்சம் கொடுங்கள் என கேட்டு பெற்றுக் கொள்வது. இதுதான் அந்த மெகா மாஸ்டர் பிளான். இதையும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் வெற்றிகரமாக செயல்படுத்தி ஆழ்வார்திருநகரி பஜார் வியாபாரிகளிடம் இருந்து மாதம் ரூ. 5 லட்சம் வரை மாமூல் மிரட்டி ரகசியமாக பெற்று வருகிறார்.
டிஎஸ்பியின் பண வெறியை பயன்படுத்திக் கொண்ட ரவுடி. ராமகிருஷ்ணனின் இந்த மாமூல் வெறியை தனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் ரவுடி அருண் பிரின்ஸ். ரவுடி அருண் பிரின்சுக்கு தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வணிகவளாக உரிமையாளர் மீது உள்ள பொறாமை காரணமாக பழி வாங்கி அவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார். டிஎஸ்பி ராமகிருஷ்ணன் வருவாய்த்துறைக்கும் மாமூல் வாங்கித்தருவதாக ஆசை காட்ட அவர்களும் டிஎஸ்பியின் திட்டத்துக்கு சம்மதித்தனர்.
எம்.பி கனிமொழி.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பஜார் கடைகள் மீது எந்த வித முன்னறிவிப்பும், நோட்டீசும் இன்றி அத்துமீறிய தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பஜாரில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினர். அத்துடன் ரவுடி அருண் பிரின்சின் பழிவாங்கும் படலத்தையும் தீர்த்து வைத்தார் ராமகிருஷ்ணன். (அதற்கு சிறப்பு சன்மானமாக அருண் பிரின்ஸ் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு தந்தது ரூ. 2 லட்சமாம்) அதன்படி அந்த வணிக வளாகத்தை வருவாய்த்துறையினருடன் இணைந்து இசக்கி மற்றும் ரவுடி அருண் பிரின்ஸ் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அடித்து நொறுக்கி ரவுடி போல செயல்பட்டுள்ளார்.
இது குறித்து நியாயம் கேட்ட தனியார் வணிக வளாகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, வயதான மூதாட்டி மற்றும் இரு மகன்கள் ஆன வழக்கறிஞர்கள் மீதும் அரசுப் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பொய் வழக்கு போட்டு ரவுடி பிரின்சின் உத்தரவை நிறைவேற்றியுள்ளார் ராமகிருஷ்ணன்.
ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டு குட்கா குற்றவாளியை விடுவித்தது
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆழ்வார்திருநகரி காவல் எல்லைக்குட்பட்ட வாய்க்காங்கரை தெருவில் சுரேஷ் என்பவர் நடத்தி வந்த பெட்டி கடையில் குட்கா புகையிலை விற்பதாக தகவல் கிடைத்து, மேற்படி கடையை ஆய்வு செய்து 50 கிலோ குட்கா புகையிலை சிக்கியுள்ளது. கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த நபரை விடுவித்து விட்டார். ரவுடி அருண் பிரின்ஸ் மூலம் மிரட்டி சுமார் ரூ. 2 லட்சம் பேரம் பேசி அதனை வாங்கிக் கொண்டார். இதற்கு உருட்டல், மிரட்டல் என டிஎஸ்பிக்கு இடைத் தரகராக இருந்து செயல்பட்டவர் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஸ்டெல்லாபாய்.
குட்கா ஏஜெண்டிடம் மாதம் ரூ. 2 லட்சம் மாமூல்.
ஆழ்வார்திருநகரி வியாபாரிகள் சங்கத்தலைவர் கண்ணன். இவர் ஆழ்வார்திருநகரி மேலபஜாரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது வீடு ஆழ்வார்திருநகரி, குழலார் தெருவில் உள்ளது. இந்த வீட்டில் கிட்டத்தட்ட 1,000 கிலோக்களுக்கு மேல் குட்கா புகையிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கண்ணன் குட்கா மொத்த வியாபார டீலராக வியாபாரம் செய்து வருகிறார். இதற்கு கண்ணன் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு மாதா மாதம் ரூ. 2 லட்சம் மாமூலாக செல்கிறது. இதற்கு இடைத்தரகராக இருந்து செயல்படுபவர் ஆழ்வார்திருநகரியில் ஹிஸ்டரி ஷீட் ரவுடியாக போலீசால் வளர்க்கப்பட்டு வரும் அருண் பிரின்ஸ்.
ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை மாமூல் ரூ. 2லட்சம்; ஆழ்வார்திருநகரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. (எஸ்பி பாலாஜி சரவணன் இருந்த வரை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போதுள்ள எஸ்பி ஆல்பட் ஜான் கண்டு கொள்வதில்லை) டிஸ்பி ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன் இது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஆழ்வார்திருநகரி நாசரேத் ரோட்டில் உள்ள பால்குளத்தை சேர்ந்த குமரன் என்பவர் பெட்டிக் கடையில் இந்த ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது இதற்கு மாதம் ஒன்றுக்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு 2 லட்சம் ரூபாய் மாமுல் செல்கிறது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
தனது தகிடு தத்தங்கள் வெளியில் தெரியாமல் இருக்க டிரைவரை ஒதுக்கி விட்டு செல்ப் டிரைவிங். ஒரு காவல்துறை அதிகாரி அவர் பணிபுரியும் சரகத்துக்கு உள்ள இடத்தில்தான் வசிக்க வேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு மட்டும் அது விதிவிலக்கு. இவருக்கு டிரைவர் இருந்தும் தானே வாகனத்தை ஓட்டிச் செல்கிறார். இவர் செய்யும் சட்டப் புறம்பான கட்டப்பஞ்சாயத்து பணம் வசூல் போன்ற விஷயங்கள் வௌியல் வந்து விடக்கூடாது என்பதால் டிரைவரை கூட தனது அருகில் நெருங்க விட மாட்டார். தனது தகிடு தத்தங்கள் வெளியில் தெரியாமல் இருக்க டிரைவரை ஒதுக்கி விட்டு செல்ப் டிரைவிங் செய்து வருகிறாராம் ராமகிருஷ்ணன்.
இவரது சொந்த வீடு திருநெல்வேலியில் உள்ளது. தினமும் அங்கிருந்துதான் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து செல்கிறார். மதிய நேரம் தனது வாகனத்தில் திருநெல்வேலியில் உள்ள வீட்டுக்கு (செல்ப் டிரைவிங்) சென்று விட்டு நன்கு தூங்கி ஓய்வெடுத்து விட்டு மாலையில் அலுவலகம் வந்து விட்டு மறுபடியும் வீட்டிற்கு சென்று விடுவார்.
தனது வாகனத்திற்கு பெட்ரோல் கணக்கு போலியாக அரசாங்கத்திடம் காட்டி செயல்படுகிறார். இவர் செல்ப் டிரைவிங்கில் தினமும் நெல்லை சென்று வருவது திருநெல்வேலி, சிவந்திப்பட்டி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் போலீஸ் செக் போஸ்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் தெளிவாக தெரியும்.
ஜாதிப்பிரச்சினையைத் தூண்டும் வண்ணம் செயல்பாடு. கடந்த 18.11.2024 அன்று ஸ்ரீவைகுண்டம் டிஎம்எஸ் கல்யாண மண்டபத்தில் வைத்து மணக்கரை பேச்சுமுத்து என்ற ரவுடியை கைது செய்கிறேன் என்ற பெயரில் சட்ட ஒழுங்கை காக்கும் காவல்துறை அதிகாரியான ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் சீருடையுடன் சென்று தேவர் சமூகத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் 80க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில் ஒன்றும் அறியாத வழக்கறிஞர் துரை என்பவர் மீதும் பொய்யாக எப்ஐஆர் போட்டு அவரை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார்.இதே போல் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வெள்ளரிக்கா விருத்தியைச் சேர்ந்த சரவணன் தேவர் என்பவர் மீது ஒரு பொய்யான கொலை வழக்கு பதிவு செய்து தேவர் சமூகத்தை இழிவு படுத்த வேண்டும் என்று கெட்ட எண்ணத்தில் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக பாதிப்படைந்த (சரவணன் தேவர்) மனுதாரர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி ஜாமீன் பெற்றார். மேலும் தன் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கேட்டு முறையிட்டுள்ளார். (ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் இது நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்பதால்….)
செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சுடலை மணி என்ற வழக்கறிஞர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் மணி மக்கள் இயக்கம் என்ற சமூக சேவை அமைப்பு நடத்தி வருகிறார். சுடலை மணி முறப்பநாடு பகுதியில் ஒரு இடத்தை அதன் உரிமையாளரிடம் பேசி விவசாயம் செய்வதற்காக முறைப்படி குத்தகைக்கு எடுத்துள்ளார். அப்போது அந்த இடத்துக்குள் நுழையக் கூடாது அது எனக்கு சொந்தமானது என பக்கத்து நிலத்தில் உள்ளவர் பிரச்சினையை கிளப்ப இந்த பஞ்சாயத்து எதிர் தரப்பு ரவுடி அருண் பிரின்ஸ் மூலம் டிஎஸ்பியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
சுடலை மணிக்கு எதிராக ஒரு புகாரை வாங்கிக் கொண்ட டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ரூ. 2 லட்சத்தை அருண் பிரின்ஸ் மூலம் லஞ்சமாக பெற்றுக் கொண்டு வக்கீல் சுடலை மணிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரச்சொல்லி உள்ளார். அந்தப் பஞ்சாயத்து இன்னும் சென்று கொண்டிருக்கிறது. வக்கீல் சுடலை மணியிடமும் டிஎஸ்பி தரப்பு லஞ்சம் கேட்க தர இயலாது அவர் மறுத்து நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டார்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் எஸ்பிக்கும், டிஐஜிக்கும், ஐஜிக்கும் தெரியுமோ தெரியாதோ. ஆனால் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அரசியல்வாதிகளின் (கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன்) அடி வருடி என்பதால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா.
‘யாராலும் என்னை அசைக்க முடியாது: ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரிக்கு நான்தான் எஸ்பி, டிஐஜி, ஐஜி எல்லாம் நான்தான். என்னை யாராலும் அசைக்க முடியாது என வௌிப்படையாகவே ராமகிருஷ்ணன் சவால் விட்டபடி செயல்படுவதால் ஸ்ரீவைகுண்டம் சப்டிவிஷன் பொதுமக்கள், வியாபாரிகள் ஒரு பக்கம் அதிர்ச்சியிலும் மறுபக்கம் கொதிப்பிலும் உள்ளனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் தொகுதி என்பதால் அந்த தொகுதி எம்பி ஊர்வசி அமிர்தராஜை கலாய்ப்பதற்காகவே ராமகிருஷ்ணன் அங்கு டிஎஸ்பியாக அமர்த்தப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் மக்கள் மனதில் தோன்றத் துவங்கியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குடும்பத்தில் உள்ளவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது சொத்துக்களை ஆய்வு செய்து வழக்கு தொடர வேண்டும் என்கின்றனர். அது தவிர வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்கின்றனர் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.